கம்பராமாயணம் 10027 · யுத்த 37.15

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வணங்கி அந்தமில் மாருதி மாமலர்
அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான்;
உணங்கு கொம்புக்கு உயிர்வரு நீர் என
சுணங்கு தோய்முலையாட்கு இவை சொல்லுவான்.

பொருள் · Meaning in Tamil

அந்தம் இல் மாருதி - அழிவற்ற சிரஞ்சீவியாகிய அனுமன்; வணங்கி - (இராமனை) வணங்கி விடைபெற்றுச் சென்று; மாமலர் அணங்கு சேர் கடிகாவு சென்று அண்மினான் - சிறந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளாகிய சீதாபிராட்டி தங்கியுள்ள காப்பமைந்த அசோக வனத்தை நெருங்கிச் சென்று அடைந்து; சுணங்கு நோய் முலையாட்கு - தேமல் பரவிய நகில்களை உடைய பிராட்டிக்கு; உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என - காய்ந்து போன கிளைக்கு உயிர் வருதற்குக் காரணமான நீரைப் போல; இவை - (பிராட்டி தளிர்த்தற்குக் காரணமான) இந்தச் செய்திகளைச்; சொல்லுவான் - சொல்லத் தொடங்கினான்.

"என்றும் ஓர்துளி வரக் காணா நன் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை"யைத் தளிர்க்கச் செய்தலின் அனுமன் கூறிய செய்திகள் நீர் எனப் பெற்றன; அனுமனும் சிரஞ்சீவி ஆதலின் "அந்தம் இல் மாருதி” எனப்பட்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Bowing, the deathless son of the Wind went and drew near
  2. the guarded grove where the goddess of the great flower dwelt,
  3. and like water that brings life back to a withered branch,
  4. he spoke these words to her whose breasts bore the pallor of grief.

What the poem says

Aṉumaṉ, himself held to be immortal, takes leave of Irāmaṉ and goes to the Aśoka grove where Cītai, likened to the lotus goddess Tirumakaḷ, is held under guard. His news will be to her like water to a withered branch: earlier the poet had pictured her as a plant parched for want of even a drop of rain, and the good news makes her bloom again.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṇaṅki antam il māruti mā malar
aṇaṅku cēr kaṭi kāvu ceṉṟu aṇmiṉāṉ;
uṇaṅku kompukku uyir varu nīr eṉa
cuṇaṅku nōy mulaiyāṭku ivai colluvāṉ.