கம்பராமாயணம் 10030 · யுத்த 37.18

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாரணி தாங்கிய மலை கிடந்தன போல் - பூமியைத் தாங்குகிற மலைகள் கீழே விழுந்து கிடந்தன போல; தலை கிடந்தன - (இராவணனது) பத்துத் தலைகள் கீழே கிடந்தன; மணித் தோள் எனும் - அழகிய தோள்கள் என்கின்ற; அலை கிடந்தன - கடல் அலைகள் கிடந்தன; உடல் - இராவணனது உடம்பு; நிலத்தே - பூமியின்கண்; ஆழி கிடந்தென - கடல் கிடந்தது என்று சொல்லும் படி; நிலை கிடந்தது - அசையாமல் கிடந்தது; என்றான் - என்று (அனுமன்) கூறினான்.

பத்துத் தலைகளும் மலைகள் போல் ஆயின. கடல் கிடந்தது போல் உடல் கிடந்தது. ஆகவே பக்கத்தில் உள்ள இருபது தோள்களும் கடல் அலைகள் போல் உள்ளன எனப் பெற்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His heads lay fallen like the mountains
  2. that bear up the earth; the waves that were
  3. his jewelled shoulders lay there; like the ocean lying still,
  4. his body lay motionless upon the ground, he said.

What the poem says

Aṉumaṉ describes the fallen Irāvaṇaṉ: his ten heads lie on the ground like the mountains that hold up the earth, his huge body lies motionless like the ocean, and his twenty shoulders spread beside it like the ocean's waves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘talai kiṭantaṉa tāraṇi tāṅkiya
malai kiṭantaṉapōl; maṇit tōḷ eṉum
alai kiṭantaṉa; āḻi kiṭanteṉa
nilai kiṭantatu uṭal nilattē ‘eṉṟāṉ.