கம்பராமாயணம் 10032 · யுத்த 37.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(அநுமன் கூறிய நற்செய்திகளைக் கேட்ட பிராட்டி) பருகல் உற்ற அமுது பயந்த நாள் - பருகுதற்கினிய தேவர் அமுதம் கடைந்தெடுத்த நாளில்; ஒரு கலைத் தனி ஒண் மதி - ஒற்றைக் கலை அளவினதாகிய சந்திரன்; வருகலைக்குள் வளர்வது மானுற - ஒவ்வொன்றாக வருகின்ற கலைகளால் தன்னுள் தானே வளர்ந்து பதினாறு கலைகளும் நிரம்பிய முழு மதியானது போல என்னும்படி; பொரு கலைக்குலம் பூத்தது போன்றனள் - நெருங்கிய கலைகளின் தொகுதி நிரம்பப் பெற்று பொலிவெய்தியதைப் போன்று தழைத்தாள்.
அமுதம் கடைந்த பொழுது சந்திரன் திருப்பாற்கடலில் தோன்றியது ஆதலின் 'அமுது பயந்த நாள்' என்றார். ஒருகலையாக முதலில் தோன்றித் தன்னுள்ளே கலைகள் வளரப் பெற்று முழுமதியானது போல பிராட்டியும் தன்னுள்ளே மகிழ்ச்சியால் பூத்துப் பொலிவெய்தினாளாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the lone bright moon of a single digit
- growing day by day through the digits that come,
- she seemed a cluster of crowding digits in full bloom,
- as on the day that yielded the nectar men long to drink.
What the poem says
Hearing the news, Cītai blossoms with joy like the moon on the day the ocean of milk was churned for the nectar of immortality, when the moon rose from that ocean. The moon begins as a single thin digit and fills out digit by digit to the full sixteen; so Cītai's happiness swells within her until she shines in full.