கம்பராமாயணம் 10033 · யுத்த 37.21

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட
தேம்பு நுண் இடை நோவ திரள்முலை
ஏம்பல் ஆசைக்கு இரட்டிவந்து எய்தினாள்
பாம்பு கான்ற பனிமதிப் பான்மையாள்.

பொருள் · Meaning in Tamil

பாம்பு கான்ற பனிமதிப் பான்மையாள் - இராகுவால் (விழுங்கிக்) கக்கப் பெற்ற குளிர்ந்த நிலவைப் போன்ற தன்மை உடைய பிராட்டி (அநுமன் சொல்லால்); ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட - ஆம்பல் மலரை ஒத்த சிவந்த வாயும் முகமும் மேலும் ஒளி விளங்க; தேம்பும் நுண் இடை நோவ - முன்பே தேய்ந்து வருந்தும் சிறிய இடையானது மேலும் வருந்தும்படி; திரள் முலை - திரண்டுருண்ட நகில் தடங்கள்; ஏம்பல் ஆசைக்கு - மகிழ்ச்சி மேலெழும் ஆசையால்; இரட்டி வந்து எய்தினாள் - (முன்பிருந்ததை விட) இரண்டு மடங்கு வளர்ந்து பொருந்தப் பெற்றாள்.

'ஆசையால்' என்னும் மூன்றாவதன்கண் 'ஆசைக்கு' என நான்காவது வந்தது. உருபு மயக்கம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Her lily-red mouth and her face burst into bloom,
  2. her slender waist, already wasting, ached
  3. as her full breasts swelled double with rising joy,
  4. she who was like the cool moon disgorged by the serpent.

What the poem says

Cītai is compared to the moon released after the eclipse serpent Rāku had swallowed it: freed from captivity, she shines again. Her red mouth, like a water lily, and her face light up, and in her joy her breasts swell to twice their size, so that her slender waist, already worn thin by grief, aches under them. Such physical signs of delight are conventional in Tamil poetry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āmpal vāyum mukamum alarntiṭa
tēmpum nuṇ iṭai nōva tiraḷ mulai
ēmpal ācaikku iraṭṭi vantu eytiṉāḷ
pāmpu kāṉṟa paṉi matip pāṉmaiyāḷ.