கம்பராமாயணம் 10037 · யுத்த 37.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘யாது இதற்கு ஒன்று இயம்பலை என்பது,
மீது உயர்ந்த உவகையின் விம்மலோ?
தூது பொய்க்கும் என்றோ? ‘ எனச் சொல்லினான்,
நீதி வித்தகன்; நங்கை நிகழ்த்தினாள்.
பொருள் · Meaning in Tamil
நீதி வித்தகன் - நீதி வழியில் தவறாது நடக்கும் திறமை உடைய அனுமன்; (பிராட்டி ஒன்றும் கூறாது இருந்தமை நோக்கி இதற்குக் காரணம்) இதற்கு யாது ஒன்று இயம்புவல் என்பது - இந்த அநுமன் வார்த்தைக்கு என்ன பதில் கூறுவேன் என்று; மீது உயர்ந்த உவகையின் விம்மலோ - மேல் எழுந்த மகிழ்ச்சிப் பெருக்கினாலா? (அல்லது); தூது பொய்க்கும் என்றோ - (இந்த அநுமன்) சொல்லிய செய்தி பொய்யாயிருக்கும் என்று கருதியோ? எனச் சொல்லினான் - என்று சொன்னான்; (அது கேட்ட) நங்கை நிகழ்த்தினாள் - சீதை பின்வருமாறு சொல்லலானாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Is it, What shall I say in reply to this,
- from the swelling of joy that has risen so high?
- Or do you think the message is false? So spoke
- the one wise in justice; and the lady answered.
What the poem says
Seeing Cītai silent, Aṉumaṉ, skilled in right conduct, asks whether she cannot find words because her joy is too great, or whether she suspects that his message is untrue. Cītai then begins to reply.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘yātu itaṟku oṉṟu iyampuval eṉpatu,
mītu uyarnta uvakaiyiṉ vimmalō?
tūtu poykkum eṉṟō? ‘ eṉac colliṉāṉ,
nīti vittakaṉ; naṅkai nikaḻttiṉāḷ.