கம்பராமாயணம் 10040 · யுத்த 37.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தன்மையோய்! - சிறந்த பண்புகளை உடையவனே!; உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி விலை இலாமையும் - (நீ செய்த உதவிக்குக் கைம்மாறாக) மூன்று உலகங்களையும் உதவலாம் என்றால் அவை அவ்வுதவிக்கு ஒப்பற்ற ஈடாக ஆகாமையை அறிந்தேன்; மேல் அவை நிலை இலாமை நினைந்தனன் - அதன் மேலும் அவ்வுலகங்கள் (நீ செய்த உதவி போல்) நிலைத்த தன்மை உடையன அல்ல என்பதை நினைந்தனன் (வேறு செய்வது ஒன்று இன்மையால்); நின்னை என் தலையினால் தொழவும் தகும் - உன்னை என்னுடைய தலையால் தொழுதலே செய்யத் தகுவதாகும்.
"தொழவே தகும்" என்னும் பாடம் சிறப்புடையது - 'தொழவும் தகும்' என்பதனுள் உம்மை பொருட்சிறப்பின்று ஆதலின். உலகம் அழிந்தபின்னும் நிலைத்து நிற்கும் பேருதவிக்கு அழிந்து போகும் 'நிலையிலா உலகங்கள் ஈடாகாமை நினைந்தாள் ஆயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- I thought that even the three worlds, if given,
- would not be a fitting price; and further
- I thought how they do not endure; O you of such worth
- that it is fitting I should worship you with my head!
What the poem says
Cītai considered giving Aṉumaṉ the three worlds in return, but they would not match his service, and besides, the worlds perish while his kindness will last beyond them. All that remains is to bow her head to him in worship. A variant reading, it is fitting only to worship you, is noted as giving a stronger sense.