கம்பராமாயணம் 10050 · யுத்த 37.38

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1என்னும்காலை இருளும் வெயிலும் கார்
மின்னும் காலை இயற்கைய வீடணன்
‘உன்னும்காலைக் கொணர்தி ‘என்று ஓதும் அப்
பொன்னின் கால்தளிர் சூடினன் போந்துளான்.

பொருள் · Meaning in Tamil

என்னும் காலை - என்று இராமன் கட்டளையிட்ட போது; இருளும் வெயிலும் - உடம்பால் காரிருளும், அணிகலன்களால் பகல் ஒளியும் உடையனாய்; கார் மின்னும் காலை இயற்கைய வீடணன் - மேகம் மின்னும் பொழுதுண்டாம் தன்மை படைத்த வீடணன்; உன்னும் காலைக் கொணர்தி என்று ஓத - நினைக்குமாத்திரத்தே அழைத்துக் கொண்டு வருக என்று இராமன் சொல்ல; போந்துளான் - உடனே அசோக வனத்துக்கு வந்து சேர்ந்து; அப்பொன்னின் கால் தளிர் சூடினன் - அந்த சீதாப் பிராட்டியின் திருவடித் தளிர்களைத் தலைமேற் சூடி வணங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he said this, Vīṭaṇaṉ, who was like dark and sunlight together,
  2. like a rain cloud at the moment it flashes with lightning,
  3. told, Bring her in the time it takes to think of it,
  4. came there and wore on his head the tender-shoot feet of that golden one.

What the poem says

Vīṭaṇaṉ, dark in body yet glittering with jewels, looks like a black rain cloud lit by lightning. Told to bring Cītai as quickly as thought, he arrives at once at the Aśoka grove and bows, placing her tender feet upon his head in reverence.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṉum kālai iruḷum veyilum kār
miṉṉum kālai iyaṟkaiya vīṭaṇaṉ
‘uṉṉum kālaik koṇarti ‘eṉṟu ōta ap
poṉṉiṉ kāl taḷir cūṭiṉaṉ pōntuḷāṉ.