கம்பராமாயணம் 10051 · யுத்த 37.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இறைவி - தலைவியே!; வேண்டிற்று முடிந்தது அன்றே - நீ விரும்பியது நிறைவேறி விட்டது அல்லவா; வேதியர் தேவன் நின்னைக் காண்டற்கு விரும்புகின்றான் - வேத பாரகர்களாகிய முனிவர்களின் வழிபடுகடவுளாகிய இராமபிரான் உன்னைக் காண்பதற்கு மிகவும் ஆசைப்படுகின்றான்; உம்பரும் காண வந்தார் - (நீங்கள் இருவரும் ஒன்று சேரும் காட்சியைத்) தேவர்களும் காண்பதற்குக் குழுமியுள்ளார்கள்; பூண்தக்க கோலம் வல்லை புனைந்தனை - அணிதற்குத் தகுதியான அலங்காரங்களை விரைவாகச் செய்வித்துக் கொண்டு; வருத்தம் போக்கி - பிரிவினால் உளதாகிய துன்பமெலிவை அகலச் செய்து; ஈண்டக் கொண்டு அணைதி - இங்கே விரைவாக அழைத்துக் கொண்டு வருவாயாக; என்றான் - என்று இராமபிரான் கட்டளையிட்டான்; எழுந்தருள் - புறப்படுவாயாக; என்றான் - என்று சொன்னான். (வீடணன்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- What you desired is accomplished, is it not? The god of the Vedic seers
- longs to see you; the gods too have come to see.
- Quickly adorn her in fitting array, take away her weariness,
- and bring her here at once, he said. Rise and come, O queen, he said.
What the poem says
Vīṭaṇaṉ delivers Irāmaṉ's message. Cītai's wish is fulfilled; Irāmaṉ, the god whom Vedic sages worship, longs to see her, and the gods have gathered to witness the reunion. Irāmaṉ has asked that she be bathed and adorned so the marks of her long suffering are gone, and brought quickly. Vīṭaṇaṉ invites her to set out.