கம்பராமாயணம் 10053 · யுத்த 37.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என்றனள் இறைவி - என்று சொன்னாள் சீதை; கேட்ட இராக்கதர்க்கு இறைவன் - அது கேட்ட அரக்க அரசனாகிய வீடணன்; 'நீலக் குன்று அன தோளினான்தன் பணியினின் குறிப்பு இது' என்றான் - நீலமலை போன்ற தோள்களை உடைய இராமபிரானது கட்டளையின் குறிப்பு இக்கோலம் கோடல் என்று சொன்னான்; நங்கை - அது கேட்ட பிராட்டி; நன்று என நேர்ந்தாள் - நல்லதே என்று அதனை உடன்பட்டாள்; (உடனே); வான நாட்டுத் திலோத்தமை முதலோர் - தேவர் உலகத்துள்ள திலோத்தமை முதலாகிய தெய்வமகளிர்; சேர - ஒன்றாக; நாயகக் கோலம் கொள்ள சென்றனர் - பிராட்டி அழகிய மேன்மையான அலங்காரம் செய்து கொள்ள வேண்டி அவள்பால் சென்றனர்.
பிராட்டியை 'சீரொடும் தா' என்று கூறியது இராமன் ஆதலின் அலங்காரம் செய்து வர வேண்டும் என்பது இராமன் குறிப்பே அன்றி என் கருத்து அன்று என்றான் வீடணன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So said the queen; hearing it, the king of the rākṣasas said,
- This is the intent of the command of him whose shoulders are like a blue hill;
- Good, said the lady, and consented to take on queenly array;
- and Tilōttamai and the others of the heavenly land went to her together.
What the poem says
Vīṭaṇaṉ explains that the adornment is not his idea but Irāmaṉ's express wish, since Irāmaṉ asked that she be brought with honour. Cītai at once agrees, and the celestial dancers led by Tilōttamai come to dress her as befits a queen.