கம்பராமாயணம் 10054 · யுத்த 37.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மேனகை, அரம்பை, மற்றை உருப்பசி -; வேறும் உள்ள வானக நாட்டு மாதர் யாவரும் - என்று பலவாக உள்ள தேவலோகப் பெண்கள் எல்லாரும்; மஞ்சனத்துக்கு ஏற்ற - பிராட்டியின் அபிடேகத்துக்குப் பொருத்தமான; நானநெய் ஊட்டப்பட்ட நவை இல கலவை தாங்கி - கஸ்தூரிப் புழுகு தீற்றப்பட்டுச் செய்த குற்றம் இல்லாத கலவைச் சாந்தைக் கையில் ஏந்திக் கொண்டு; போனகம் துறந்த தையல் - (இலங்கைச் சிறையில் இருந்த காலம் எல்லாம்) உணவைத் துறந்து விரதம் இருந்த பிராட்டியின்; மருங்கு உற நெருங்கிப் புக்கார் - பக்கத்தில் பொருந்த நெருக்கமாக வந்து சேர்ந்தனர்.
நானம் - கஸ்தூரி, புனுகு என்பர். வாசனைத் திரவியங்களில் ஒன்று. சென்ற பாட்டின் இறுதியில் திலோத்தமை முதலோர் என்றமையின் ஏனைய மூவரும் இப்பாடலின் முதற்கண் குறிப்பிட்டார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Mēṉakai, Arampai, and Uruppaci besides, and all the other
- women of the heavenly land there were, bearing
- flawless unguents steeped in fragrant musk-oil fit for the bath,
- pressed close and entered beside the lady who had given up food.
What the poem says
The celestial nymphs Mēṉakai, Arampai, Uruppaci and the rest, following Tilōttamai named in the previous verse, crowd round Cītai, who had fasted throughout her captivity. They bring flawless pastes scented with musk and civet for her ritual bath.