கம்பராமாயணம் 10055 · யுத்த 37.43

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அரம்பை - தேவமாதர்களுள் அரம்பை என்பவள்; பெண்மைக்கு எல்லாம் காணியை - பெண்களின் பெண்மைக் குணங்களுக்கு விளைநிலம் எனத்தக்க பிராட்டியை; கற்பினுக்கு அணியை - கற்பு என்னும் நற்பண்புக்கு மேலும் அழகு செய்பவளாய சானகியை; பொற்பின் ஆணியை - அழகிற்கு உரையாணி போன்ற திருமகளை; அமிழ்தின் வந்த அமிழ்தினை - திருப்பாற்கடலில் அமிழ்தத்துடன் தோன்றிய அமுதம் போன்ற செந்திருவை; அறத்தின் தாயை - அறத்தை வளர்க்கும் அன்னையாகிய பிராட்டியை; வேணியை - கூந்தலை; மெல்ல - மெதுவாக; சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன - மிக உயர்ந்த வேதங்களை எல்லாம் பிரித்து வகுத்தருளிய திருமால்போல; விரல் முறை சுகிர்ந்து விட்டாள் - விரல்களால் ஒழுங்காக சிக்கெடுத்து பிரித்து சீர்செய்தாள்.

வேதமே பிராட்டியின் கூந்தல் எனவும், வேதத்தை வகைப் படுத்தியது போல் பிராட்டியின் கூந்தலைப் பிரித்து வாரி ஒழுங்கு படுத்தினாள் எனவும் கூறினார். தாயை வேணியைச் சுகிர்ந்து விட்டாள் என்பதனைப் பசுவினை பாலினைக் கறந்தான் என்பது போல இரண்டு செயப்படு பொருள் வந்ததாகக் கொள்க. பசுவினது பாலினைக் கறந்தான் என்று முதற்கண் ஆறாம் வேற்றுமை கொள்வது போல் 'தாயது வேணியைச் சுகிர்ந்து விட்டாள்' என ஆறாவது உருபு அமையின் பொருந்துதல் காண்க. 'தாயை வேணியின் கண்' எனப் பின்னர் ஏழாம் வேற்றுமை வந்து அமைதலும் உண்டு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Her who is the very ground of all womanhood, the jewel of chastity,
  2. the touchstone of beauty, the nectar that came with the nectar, the mother of dharma,
  3. like the blessed one who set in order all the lofty Vedas,
  4. Arampai gently, strand by strand with her fingers, combed out her braided hair.

What the poem says

Arampai gently untangles and combs Cītai's long-matted hair. Cītai is praised as the field from which womanhood grows, the ornament of chastity, the touchstone of beauty, the nectar-like goddess who rose with the nectar from the ocean of milk, and the mother of dharma. Combing her hair strand by strand is compared to Tirumāl arranging the Vedas into their divisions, as though her hair were the Veda itself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kāṇiyaip peṇmaikku ellām, kaṟpiṉukku aṇiyai, poṟpiṉ
āṇiyai, amiḻtiṉ vanta amiḻtiṉai, aṟattiṉ tāyai,
cēṇ uyar maṟaiyai ellām muṟai ceyta celvaṉ eṉṉa,
vēṇiyai, arampai, mella, viral muṟai cukirntu viṭṭāḷ.