கம்பராமாயணம் 10056 · யுத்த 37.44

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பாகு அடர்ந்து அமுது பில்கும் பவளவாய்த் தரளப் பத்தி
சேகு அற விளக்கி, நானம் தீட்டி, மண்சேர்ந்த காசை
வேகடம் செய்யுமாபோல், மஞ்சன விதியின், வேதத்து
ஓகை மங்கலங்கள் பாட, ஆட்டினர், உம்பர் மாதர்.

பொருள் · Meaning in Tamil

தேவப் பெண்கள்; பாகு அடர்ந்து - சர்க்கரைப் பாகினை ஒத்த இன்சுவை நெருங்கி; அமுது பில்கும் - இன்சொற்களை வெளியிடும்; பவள வாய் - பவளம் போன்ற சிவந்த வாயின்கண் உள்ள; தரளப்பத்தி - முத்து போன்ற பல்வரிசைகளை; சேகு அற விளக்கி - வைரமாகப் பிடித்த மாசு நீங்க சுத்தம் செய்து; நானம் தீட்டி - வாசனைச் சாந்தைப் பூசி; மண் சேர்ந்த காசை வேகடம் செய்யுமா போல் - மண்ணிற் படிந்து மங்கிப் போன இரத்தினத்தை சாணையிட்டுச் சுத்தம் செய்து ஒளிவீசச் செய்வது போல; மஞ்சன விதியின் - நீராடுதற்குரிய விதிமுறைகளின் படி; வேதத்து ஓகை மங்கலங்கள் பாடி - வேதநூலிற் கூறிய வண்ணம் மகிழ்ச்சிக்குரிய மங்களமான பாடல்களைப் பாடி; ஆட்டினர் - நீராட்டினார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They cleaned till no hardened stain remained the row of pearls
  2. in her coral mouth that drips nectar thick as syrup, applied fragrant paste,
  3. and as one polishes a gem that has lain in the earth, by the rule of the bath,
  4. singing the joyful auspicious songs of the Veda, the women of heaven bathed her.

What the poem says

The heavenly women clean Cītai's pearl-like teeth in her coral-red mouth, from which words sweet as syrup flow, anoint her with fragrant paste and bathe her according to ritual rule, singing auspicious Vedic songs. Restoring her is like polishing a gem dulled by lying in the earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāku aṭarntu amutu pilkum pavaḷa vāyt taraḷap patti
cēku aṟa viḷakki, nāṉam tīṭṭi, maṇ cērnta kācai
vēkaṭam ceyyumāpōl, mañcaṉa vitiyiṉ, vētattu
ōkai maṅkalaṅkaḷ pāṭi, āṭṭiṉar, umpar mātar.