கம்பராமாயணம் 10057 · யுத்த 37.45

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உருவிளை பவள வல்லி பால்நுரை உண்ட தென்ன
மருவிளை கலவை ஊட்டிக் குங்குமம் முலையின் மாட்டி,
கருவிளை மலரின் காட்சிக் காசு அறு தூசும் காமர்
திருவிளை அல்குற்கு ஏற்ப மேகலை தழுவச் சேர்த்தார்

பொருள் · Meaning in Tamil

உரு விளை பவள வல்லி நுரை உண்டது என்ன - அழகிற் சிறந்த பவளக் கொடி பால் நுரையால் மூடப்பெற்றது போலும் என்று சொல்லும்படி; மரு விளை கலவை அட்டி - (மேனி எல்லாம்) மணம் நிரம்பிய (வெள்ளிய) கலவைச் சாந்தை மறையும்படி பூசி; குங்குமம் முலையின் ஆட்டி - குங்குமக் குழம்பை முலை முழுக அப்பி; கருவிளை மலரின் காட்சிக்காசு அறு தூசு - கருவிள மலர் போன்ற காணற்கினிய குற்றமற்ற பொன்னாடையோடு; காமன் திரு விளை அல்குற்கு ஏற்ப மேகலை - மன்மதனது செல்வம் விளங்கும் அல்குலைத் தாங்கும் இடைக்குப் பொருத்தமாக மேகலை என்னும் ஆபரணமும்; தழுவச் சேர்த்தார் - பொருந்தித் தழுவும்படி அணிவித்தார்.

சிவந்த சீதையின் திருமேனி மேல் வெண்ணிறக் கலவை அப்பியது பவளக் கொடியைப் பால் நுரை மூடியது போன்றது. பெண்ணுறுப்பை மன்மத பீடம் என்பர் ஆதலின் 'காமன் திருவிளை அல்குல்' என்றார். மேகலை - எட்டுக் கோவைகளை உடைய இடையணியாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As if a beautiful coral creeper had drunk the foam of milk,
  2. they spread fragrant unguent on her, bathed her breasts in saffron,
  3. and a flawless garment lovely as the karuviḷai flower, with a girdle
  4. fitted to her hips where Kāmaṉ's wealth abounds, they clasped about her.

What the poem says

The nymphs anoint Cītai's reddish-gold body with white sandal paste, so that she looks like a coral creeper covered in milk foam. They smear saffron on her breasts, dress her in a flawless garment that is a delight to see, like the blue karuviḷai flower, and fasten round her hips the mēkalai, a girdle of eight strands.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uru viḷai pavaḷa valli pāl nurai uṇṭateṉṉa
maru viḷai kalavai aṭṭi kuṅkumam mulaiyiṉ āṭṭi,
karuviḷai malariṉ kāṭcik kācu aṟu tūcu kāmaṉ
tiru viḷai alkuṟku ēṟpa mēkalai taḻuvac cērttār