கம்பராமாயணம் 10058 · யுத்த 37.46

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இந்திரன் தேவிக்கு ஏற்ப இயைவன - இந்திரனது மனைவியான இந்திராணிக்குப் பொருத்தமாக உரிய; சந்திரன் தேவிமாரின் தகை உறு தரளம் பைம் பூண் - சந்திரனது மனைவிமார்களாகிய நக்ஷத்திரங்களைப் போன்ற அழகு மிக்க முத்துக்களால் ஆகிய பசும்பொன்னணியை; பூட்டி - அணிவித்து; யாணர்ச் சிந்துரப் பவளச் செவ்வாய் - புதிய சிந்தூரம் போலவும் பவழம் போலவும் சிவந்த வாயில்; தேம் பசும் பாகு தீற்றி - இனிய பசிய பாக்குடன் கூடிய தாம்பூல சாரத்தை உண்பித்து; மந்திரத்து அயினி நீரால் வலம் செய்து - மந்திரத்தோடு கூடிய ஆலத்தி நீரால் சுழற்றி; காப்பும் இட்டார் - பின் அதனால் நெற்றிக் காப்பும் இட்டார்கள்.

சந்திரன் தேவியர் விண்மீன்கள். அத்தாராகணங்களைப் போன்ற முத்துக்கள் என்க. வாய்க்கு சிந்துரம், பவளம் உவமை. பாகு - பாக்கு எனவே வெற்றிலை சுண்ணாம்பு கொள்ளப்பட்டு தாம்பூலம் எனப் பெற்றது. தீற்றி - தின் என்ற பகுதியால் பிறந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Golden ornaments of pearls as lovely as the Moon's queens,
  2. fit for the queen of Intiraṉ, they fastened on her; into her fresh
  3. red mouth, coral and vermilion, they fed sweet green areca,
  4. circled her with consecrated lamp-water and set the protective mark.

What the poem says

The adornment continues. Cītai is decked in gold set with pearls as lovely as the stars, who are the Moon's wives, jewels fit for Intiraṉ's queen. She is given betel and areca to redden her coral lips, and the women wave consecrated water around her to ward off the evil eye and mark her forehead with it for protection.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cantiraṉ tēvimāriṉ takai uṟu taraḷap paim pūṇ,
intiraṉ tēvikku ēṟpa, iyaivaṉa pūṭṭi, yāṇarc
cinturap pavaḷac cev vāyt tēm pacum pāku tīṟṟi,
mantirattu ayiṉi nīrāl valañceytu kāppum iṭṭār.