கம்பராமாயணம் 10059 · யுத்த 37.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அண்ணல் வீடணன் - தலைமையான வீடணன் (பிராட்டியை); மண்டல மதியின் நாப்பண் மான் இருந்தென்ன - வட்டமான சந்திரன் நடுவே மான் இருப்பதைப் போல; கொண்டனர் மானம் ஏற்றி - அழைத்துக் கொண்டு வந்தவர்களாய் விமானத்தில் ஏற்றி வைத்து; வான மடந்தையர் தொடர்ந்து கூட - தேவப் பெண்கள் பின் பற்றி உடன் வர; உண்டை வானரரும் ஒள்வாள் அரக்கரும் புறம் சூழ்ந்து ஓட - உருண்ட வடிவமைப்புடைய குரக்கு வீரரும் ஒளிபடைத்த வாள் ஏந்திய அரக்கரும் புறத்தே சுற்றிக் கொண்டு ஓடிவர; அண்டர் நாயகன் பால் - தேவதேவனாகிய இராமபிரானிடத்து; அருளின் சென்றான் - அவன் கட்டளையிட்டருளியபடி சென்று சேர்ந்தான்.
குரங்குகளின் உருண்ட வடிவமைப்பு நோக்கி 'உண்டை' என்பது வந்தது. வீடணச் சார்புடைய அரக்கர்கள் பிழைத்திருப்பவர் உளராதலின் 'அரக்கரும்' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the deer that sits in the middle of the round moon,
- they set her in a sky-car, the heavenly maidens following close,
- the stocky monkeys and rākṣasas with bright swords running round about,
- and noble Vīṭaṇaṉ went by the Lord's grace to the master of the gods.
What the poem says
Cītai is seated in a palanquin-car and looks like the deer that Indian tradition sees in the middle of the full moon. The heavenly women follow; sturdy, round-bodied monkeys and sword-bearing rākṣasas, those of Vīṭaṇaṉ's party who survived, run alongside; and Vīṭaṇaṉ leads her to Irāmaṉ as he was commanded.