கம்பராமாயணம் 10060 · யுத்த 37.48

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இப்புறத்து இமையவர் முனிவர் ஏழையர்
துப்பு உறச் சிவந்தவாய் விஞ்சைத் தோகையர்
முப்புறத்து உலகினும் எண்ணின் முற்றினார்
ஒப்புறக் குவிந்தனர் ஓகை கூறுவார்.

பொருள் · Meaning in Tamil

இப்புறத்து - இராமன் இருக்கும் இவ்விடத்து; இமையவர் முனிவர் ஏழையர் - தேவர்கள், முனிவர்கள், பெண்கள்; துப்பு உற சிவந்த வாய் விஞ்சைத் தோகையர் - பவளம் போற் சிவந்த வாயினை உடைய வித்தியாதரப் பெண்கள்; முப்புறத்து உலகினும் எண்ணில் முற்றினோர் - மூவுலகங்களினும் மதிக்கற்பாட்டில் உயர்ந்தவர்கள் எல்லாரும்; ஓகை கூறுவார் - மகிழ்ச்சி வார்த்தைகளைச் சொல்பவர்களாய்; ஒப்புறக் குவிந்தனர் - தம்முள் வேறுபாடில்லாது ஒத்த தன்மையராய்த் திரண்டார்கள்.

மக்கள் கூட்டம் திரளும் போது செல்வம், கல்வி, சாதி, பதவி பற்றிய உயர்வு தாழ்வு கருதப்படாமல் எல்லோரும் ஒருதன்மையராய் இருத்தல் வழக்கடு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On this side, the unblinking gods, sages, women,
  2. Vidyādhara maidens like peahens, with mouths red as coral,
  3. and all those of highest esteem in the three worlds
  4. gathered as equals, speaking words of joy.

What the poem says

Meanwhile, where Irāmaṉ waits, a vast crowd assembles: gods, sages, women, Vidyādhara maidens and all the honoured beings of the three worlds, mingling as equals and exclaiming in joy. In such a throng, distinctions of wealth, learning, caste and rank are forgotten.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ip puṟattu imaiyavar muṉivar ēḻaiyar
tuppu uṟac civanta vāy viñcait tōkaiyar
mup puṟattu ulakiṉum eṇṇil muṟṟiṉōr
oppuṟak kuvintaṉar ōkai kūṟuvār.