கம்பராமாயணம் 10061 · யுத்த 37.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அருங்குலக் கற்பினுக்கு அணியை அண்மினார் - அரிய உயர்ந்த குலத்தில் தோன்றிக் கற்புக்கு அணிகலமாக விளங்கும் பிராட்டியை (அனைவரும்) அணுகினார்கள்; மருங்கு பின் முன் செல வழி இன்று என்னலாய் நெருங்கினர் - (பிராட்டி விமானத்தின்) பக்கவாட்டிலும் பின்னும் முன்னும் செல்லுவதற்கு வழி இல்லை என்று சொல்லும் படி நெருங்கினார்கள்; நெருங்குழி - அவ்வாறு சூழ்ந்து நெருங்கிய பொழுது; நிருதர் ஓச்சலால் - (வழிவிலகிச் செல்ல வேண்டி) அரக்க காவலர் (பிரம்பை) வீசி விரட்டுதலால்; கம்பலை - கூக்குரல் ஒலி; கருங்கடல் முழக்கு எனப் பிறந்த - கரிய கடலின் அலையொலி போலப் பேரளவினதாக உண்டாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They drew near to her, the jewel of chastity of a rare lineage,
- pressing so close that one might say there was no way to pass
- at the sides, behind or in front; and as they pressed, the Nirutar drove them back,
- and an uproar arose like the roar of the dark sea.
What the poem says
Everyone crowds around Cītai's car until there is no room to move on any side. The rākṣasa guards swing their canes to clear a path, and the outcry of the jostled crowd rises like the roar of the dark ocean.