கம்பராமாயணம் 10064 · யுத்த 37.52

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘கடுந்திறல் அமர்க்களம் காணும் ஆசையால்
நெடுந் திசை தேவரும் நின்ற யாவரும்
அடைந்தனர்; உவகையின் அணைகின்றார்களைக்
கடிந்திட யார் சொனார்? கருது நூல்வலாய்!

பொருள் · Meaning in Tamil

கருது நூல் வலாய் - உணரப்படும் சாஸ்திரங்களில் வல்ல வீடணனே!; நெடுந்திசைத் தேவரும் நின்ற யாவரும் - நெடிய திக்குப் பாலகர்களாய தேவர்களும் மற்றும் ஆங்காங்கே நின்றிருந்த எல்லாரும்; கடுந்திறல் அமர்க்களம் காணும் ஆசையால் - கொடிய வலிமையோடு போர் நடந்த இடத்தைப் பார்க்கும் விருப்பம் காரணமாக; அடைந்தனர் - நெருங்கித் திரண்டுள்ளனர்; உவகையின் அடைகின்றார்களைக் கடிந்திட யார் சொனார் - மகிழ்ச்சியால் அருகே வந்து சேர்ந்தவர்களை அடித்து விரட்டும்படி யார் உத்தரவிட்டார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Out of longing to see the field of fierce and mighty battle,
  2. the gods of the far directions and all who stood here
  3. have come; who told you to drive away
  4. those who approach in joy, O master of the books we ponder?

What the poem says

Irāmaṉ continues his rebuke. The guardian gods of the directions and everyone else have come out of eagerness to see the battlefield where such a fierce war was fought. Who ordered that people coming in joy be beaten back?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kaṭun tiṟal amark kaḷam kāṇum ācaiyāl
neṭun ticait tēvarum niṉṟa yāvarum
aṭaintaṉar; uvakaiyiṉ aṭaikiṉṟārkaḷaik
kaṭintiṭa yār coṉār? karutu nūl valāy!