கம்பராமாயணம் 10067 · யுத்த 37.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அருந்ததி அனைய நங்கை அமர்க்களம் அணுகி - அருந்ததியை ஒத்த கற்பின் செல்வியாகிய சீதை போர்க்களத்தை நெருங்கி; ஆடல் பருந்தொடு கழுகும் பேயும் பசிப்பிணி தருமாறு - ஆடுகின்ற பருந்தும் கழுகும் பேயும் பசிநோய் நீங்கும்படி; விருந்து இடு வில்லின் செல்வன் விழா அணி விரும்பி நோக்கி - அவைகளுக்கு உணவு புதிதாகத் தருகின்ற வில்லினால் விளைக்கும் போராற்றலிற் சிறந்த இராமனது போர்க்காட்சிக் கோலத்தை விரும்பிப் பார்த்து; கருந்தடங்கண்ணும் நெஞ்சும் களித்திட - கரிய அகன்ற கண்களும் மனமும் உவகை ஏற; இனைய சொன்னாள் - பின்வரும் வார்த்தைகளைச் சொல்லலானாள்;
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lady like Aruntati, drawing near the battlefield,
- looking with longing at the festive array of the lord of the bow
- who set a feast so that hovering kites, vultures and ghouls
- were rid of the sickness of hunger, her dark wide eyes and heart rejoicing, said this.
What the poem says
As Cītai, as chaste as Aruntati, the star who is the emblem of wifely fidelity, approaches the battlefield, she gazes with delight at the scene of Irāmaṉ's triumph, where his bow has provided a feast for kites, vultures and ghouls. Her eyes and heart overflow with joy, and she speaks.