கம்பராமாயணம் 10068 · யுத்த 37.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சீலமும் காட்டி - என்னுடைய கற்பொழுக்கத்தையும் என் கணவற்குக் காண்பித்து; என் கணவன் சேவகக் கோலமும் காட்டி - என் கணவனாகிய அப்பிரானது போர்க்கோலக் காட்சியையும் யான் பார்க்கும்படிச் செய்து; என் குலமும் காட்டி - நான் பிறந்த குலத்தையும் புகுந்த குலத்தையும் நிலைநிறுத்தி; இஞ் ஞாலமும் காட்டிய கவிக்கு - இவ்வுலகத்தையும் இராவணனால் அழியாதபடி நிலைநிறுத்திய இவ்வனுமனாகிய குரங்குக்கு; என் கற்பு - என் கற்பானது; நாள் அறாக் காலமும் காட்டுங்கொல் - நாள் இடையற்றுப் போகாமல் என்றும் வாழ்வதாகிய சிரஞ்சீவித் தன்மையையும் தருமோ?; என்றாள் -. அனுமன் சிறையிலிருந்த செல்வியை இலங்கையிற்கண்டு சொல்லியதே இராவணன் அழிவுக்கும் சீதையின் சிறைமீட்சிக்கும் காரணமாதலின் அனுமனே எல்லாற்றையும் செய்தவன் என நெஞ்சு நெகிழ்ந்தாள் பிராட்டி. காலம் என்றும் உள்ளது. உயிர்கள் இடையில் நாள் அறுகின்றன. நாள் அறாமை காலம் உள்ள துணையும் தானும் இருத்தலாகிய அழிவின்மையாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To the monkey who showed my virtue, who showed me
- my husband in his warrior's array, who upheld my lineage,
- and who preserved this world as well, will my chastity
- grant a span of time whose days never end? she said.
What the poem says
Cītai credits Aṉumaṉ with everything: he revealed her faithfulness to Irāmaṉ, let her see her husband as a warrior, upheld the honour of both her birth family and her husband's family, and saved the world from Irāvaṇaṉ. She prays that the power of her chastity may grant him unending life. Time itself is endless while creatures' days run out; to live as long as time is to be immortal, and Aṉumaṉ is traditionally counted among the deathless.