கம்பராமாயணம் 10069 · யுத்த 37.57

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என் உடல் எச்சில் உயிர் ஏகிற்றே - இராவணன் கொணர்ந்து சிறை வைத்ததால் என் உடல் தூய்மை இழந்தது; உயிர் எப்பொழுதோ போய்விட்டது; நச்சு இனி இலை - விருப்பம் என்பது எதுவும் இனி எனக்கு இல்லை; என்பது ஓர் நவைஇலாள் - என்று (சிறையிருந்த போது) சொல்லிக் கொண்டிருந்தவளாகிய ஒரு குற்றமும் அற்ற பிராட்டி; பச்சிலை வண்ணமும் பவள வாயுமாய்க் கைச்சிலை ஏந்தி நின்றானை - பச்சிலை போன்ற திருமேனி நிறத்தையும் பவளம் போன்ற சிவந்த திருவாயையும் உடையனாய்க் கையில் கோதண்டம் தாங்கி நின்ற பெருமானை; எதிர் கண்ணுற்றாள் - எதிரே பார்த்தாள்.

சிறையிருந்த செல்வியின் சிந்தனையோட்டம் கூறப்பட்டது. இராவணன் தீண்டிலன் ஆயினும் மனத்தால் நினைக்கும்படி நேர்ந்துவிட்டது. ஆதலின் "எச்சில் என் உடல்” என்பாளாம். இராமனே அவட்கு உயிர் ஆதலின் இராமனைப் பிரிந்த போதே 'உயிர் போயிற்று' என்றாளாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. My body is defiled, my life is gone;
  2. I have no more desire: so the faultless one would say,
  3. and now she saw before her the one who stood
  4. with the hue of green leaves and coral lips, holding the bow in his hand.

What the poem says

In captivity Cītai used to say that her body was defiled, since Irāvaṇaṉ, though he never touched her, had carried her off and desired her; that her life had already departed, since Irāmaṉ is her life; and that she wanted nothing more. Now she sees Irāmaṉ himself standing before her, his body the colour of fresh green leaves, his lips like coral, bow in hand.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eccil eṉ uṭal uyir ēkiṟṟē; iṉi
naccu ilai ‘eṉpatu ōr navai ilāḷ etir
paccilai vaṇṇamum pavaḷa vāyum āyk
kaic cilai ēnti niṉṟāṉaik kaṇṇuṟṟāḷ.