கம்பராமாயணம் 10071 · யுத்த 37.59
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பிறப்பினும் துணைவனை - எப்பிறப்பு எடுத்தாலும் பிறவிதோறும் துணையாக வருகின்றவனை; பிறவிப் பேர் இடர் துறப்பினும் துணைவனை - பிறவி என்கிற பெருந்துன்பத்தை விட்டுப் பரமபதம் எய்தினாலும் அங்கேயும் இவ்வுயிர்க்குத் துணையாக இருக்கின்ற நாயகனை; தொழுது - வணங்கி; நான் இனி மறப்பினும் நன்று - (என் ஆசை நிறைவேறிவிட்டது ஆதலின் நான் இனிமேல் அப்பெருமானை மறந்து விட்டாலும் நல்லதே; என ஏக்கம் நீங்கினாள் - என்று சொல்லி மனத்தளர்ச்சி நீங்கப் பெற்றாள்.
"இப்பிறப்பில் காண்டலோ அரிது என்று என்று விம்முறும் கலங்கும்" (கம்ப. 5081) என்கின்ற முன்னைய ஏக்கம் நீங்கப் பெற்றாள் ஆதலின் 'இனி' எதுவானால் என்ன என்றாளாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Worshipping the companion of every birth, the companion
- even when the great affliction of birth is left behind, she said,
- Now even if I should forget, it is well; even if I should now
- fall and die in some other way, it is well, and her longing left her.
What the poem says
Cītai worships Irāmaṉ, her companion through every birth and even beyond birth, in final liberation. Her old anguish that she might never see him again in this life is gone, so whatever happens now, even forgetting or death, no longer matters to her.