கம்பராமாயணம் 10072 · யுத்த 37.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அத் தலைவனும் - அந்த தலைமையான நாயகனாகிய இராமனும்; கற்பினுக்கு அரசினை - கற்பு என்னும் குணநலத்துக்கு அரசாக உள்ளவளை; பெண்மைக் காப்பினை - பெண்மைக் குணங்களுக்கு வாழ்விடமாக உள்ளவளை; பொற்பினுக்கு அழகினை - அழகிற்கு அழகாக விளங்குகின்ற பிராட்டியை; புகழின் வாழ்க்கையை - புகழை இவ்வுலகில் வாழும்படி நிலை நிறுத்திய தேவியை; தன் பிரிந்து அருள்புரி தருமம் போலியை - தனி நாயகனாகிய தன்னைப் பிரிந்து உயிர்களுக்கு நல்லருள் செய்யும் தருமம் போன்ற சீதையை; அற்பின் - அன்பினால்; அமைய நோக்கினான் - நன்றாகப் பார்த்தான்.
'பெண்மைக் காப்பினை' என்பதனை "குணங்களை என் கூறுவது? கொம்பினைச் சேர்ந்து அவை உய்யப் பிணங்குவன” (கம்ப. 683) என்ற பாலகாண்டப்பாடல் நன்கு விளக்கும். அமைய நோக்கினான் என்பது ஆசைதீரப் பார்த்தான் என்றவாறாம். நெடுங்காலம் பிரிந்து நின்ற ஏக்கம் தீரப் பார்த்தான் என்பதாம். 'அமைய' என்ற சொல்லாட்சியினால் பின்னர் இராமன் சீதையை நோக்கிக் கூறிய கடிந்துரைகள் உள்ளத்தொடு படாதன என்பதும் உலகோர்க்கு உணர்த்த வந்த உதட்டு வசனங்கள் என்பதும் விளங்கும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The queen of chastity, the safe keeping of womanhood,
- the beauty of beauty itself, the very life of fame,
- she who was like dharma that had parted from him to show grace,
- that lord too, with love, looked on her to his heart's content.
What the poem says
Irāmaṉ gazes at Cītai with love until his long longing is satisfied. She is the queen of chastity, the dwelling place of womanly virtues, beauty's own beauty, the one who keeps fame alive, and like dharma itself, which had gone apart from him to show grace to all beings. The word for gazing to his heart's content signals that the harsh words Irāmaṉ is about to speak do not come from his heart: they are lip-words meant for the world to hear.