கம்பராமாயணம் 10073 · யுத்த 37.61

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சுணங்கு உறுதுணை முலை முன்றில் தூங்கிய
அணங்கு உறு நெடும் கண் நீர் ஆறு வார்வுற
வணங்கிய மயிலினை கற்பின் வாழ்வினை
பணம்கிளர் அரவு என எழுந்து பார்ப்பு உறா.

பொருள் · Meaning in Tamil

சுணங்கு உறு துணை முலை முன்றில் தூங்கிய - தேமல் பொருந்திய இரண்டாகிய முலைப் பரப்பில் சோர்ந்த; அணங்கு உறு நெடுங்கண் நீர் ஆறு வார்வுற - வருத்தமிகுதியால் உளதான நீண்ட கண்ணீராறு ஒழுக; வணங்கு இயல் மயிலினை - வணங்கும் தன்மை உடைய மயில் போல்வாளை; கற்பின் வாழ்வினை - கற்பு நிலைபெற்று வாழக் காரணமானவளாகிய பிராட்டியை; பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா - படம் எடுத்துச் சீறுகின்ற பாம்பைப் போலச் சினந்து பார்த்து.

இவள் இத்தகையவளாயிருக்கவும் இவனுக்கும் கோபம் வந்தவாறு எவ்வாறு என வியந்ததாம். முன்பில்லாத படத்தை எடுத்துச் சீற்றம் காட்டும் பாம்புபோல என்றது தன்னுள்ளத்தே அன்பு சுரக்கவும் தன்னை ஒரு காரணத்தால் வலிமை செய்து கொண்டு சீறினான் இராமன் என்பது தோன்ற உரைத்ததாம். இங்கு மயிலினை என்று பிராட்டியைக் கூறி, இராமனை அரவு என்றது ஓர் நயம். மயிலே பாம்பைச் சீறுவதாக இருக்கவும் இங்கு மயிலைப் பாம்பு சீறியது என்றது ஓர் முரண் நயம் - குற்றமற்ற பிராட்டியைக் குற்றமுள்ளவள் போல இராமன் சீறியது பொருந்தாமையைக் காட்டி நிற்கிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a river of tears from her long, grief-stricken eyes
  2. streaming down over the courtyard of her pale-flecked breasts,
  3. the bowing peahen, the very life of chastity,
  4. he rose like a serpent spreading its hood and looked at her.

What the poem says

Cītai stands bowed and weeping, her tears running down onto her breast. Irāmaṉ rises against her like a cobra raising its hood. The poet suggests that Irāmaṉ forces himself into anger for a purpose even while love wells up in him. There is a pointed reversal in the image: normally the peacock attacks the snake, but here the snake rears against the peahen, showing how unfitting it is for the faultless Cītai to be treated as guilty.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuṇaṅku uṟu tuṇai mulai muṉṟil tūṅkiya
aṇaṅku uṟu neṭuṅ kaṇnīr āṟu vārvuṟa
vaṇaṅku iyal mayiliṉai kaṟpiṉ vāḻviṉai
paṇam kiḷar aravu eṉa eḻuntu pārppuṟā.