கம்பராமாயணம் 10076 · யுத்த 37.63

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘மருந்தினும் இனிய மன்னுயிரின் வான்தசை
அருந்தினையே; நறவு அமைய உண்டியே;
இருந்தனையே இனிது? எமக்கும் ஏற்பன
விருந்து உளவோ? உரை வெறுமை நீங்கினாய்!

பொருள் · Meaning in Tamil

வெறுமை நீங்கினாய் - இல்லாமையை இல்லாதவளே!; மருந்தினும் இனிய - தேவர் அமுதினும் இனியதாகிய; மன் உயிரின் வான்தசை அருந்தினையே - பிராணிகளின் புலால்களைப் புசித்தாயல்லையே!; நறவு அமைய உண்டியே - கள்ளை நன்கு உண்டாயல்லையோ; இனி இருந்தனையே - இவ்வளவான பிறகும் உயிரோடு இருக்கின்றாயல்லையோ; ஏற்பன விருந்து எமக்கும் உளவோ உரை - பொருத்தமான விருந்துணவு எனக்கும் இருக்கின்றனவா? சொல்வாயாக.

அரக்கர் உணவு என்பதால் புலாலும் கள்ளும் கூறினானாம். வலிந்து பழிக்க விரும்புவான் ஆதலின் கேலியாக 'எமக்கும் விருந்துளவோ' என்றானாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You ate, did you not, the choice flesh of living creatures, sweeter than nectar?
  2. You drank your fill of toddy, did you not?
  3. And you have stayed alive? Are there, then, feasts
  4. fit for us too? Tell me, you who lacked for nothing!

What the poem says

Irāmaṉ mocks Cītai, implying that in Ilaṅkai she ate meat and drank toddy, the food of rākṣasas, and lived in plenty. He sarcastically asks whether there is a feast left for him too. The commentary stresses that these insults are forced: he is deliberately trying to find fault.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘maruntiṉum iṉiya maṉṉuyiriṉ vāṉ tacai
aruntiṉaiyē; naṟavu amaiya uṇṭiyē;
iruntaṉaiyē? iṉi emakkum ēṟpaṉa
viruntu uḷavō? urai veṟumai nīṅkiṉāy!