கம்பராமாயணம் 10077 · யுத்த 37.64

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘கலத்தினின் பிறத்த மாமணியின் காந்துறு
நலத்தினின் பிறந்தன நடந்த; நன்மைசால்
குலத்தினில் பிறந்திலை; கோள் இல் கீடம்போல்
நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ.

பொருள் · Meaning in Tamil

கலத்தினின் பிறந்த மாமணியின் காந்துறு நலத்தின் நிற் பிறந்தன நடந்த - ஆபரணங்களிற் பதிக்கப்படும் இரத்தினம் போலப் பிரகாசிக்கின்ற நன்மையோடு பொருந்திய குணம் செயல்களாய் நின்னிடம் முன்பு உள்ளனவாய அவை இப்பொழுது போயின; நன்மை சால் குலத்தினில் பிறந்திலை - மேன்மையுடைய உயர்குலத்தில் பிறந்தவளாய் நடந்து கொள்ளவில்லை; கோள் இல் கீடம் போல் நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் - குறிக்கோள் இல்லாத புழுவைப் போல் மண்ணில் பிறந்தாய் என்பதை நிரூபித்து விட்டாய்.

சீதை நிலத்தை உழுதபோது படைச்சாலில் தோன்றியவள் என்பது கருதி இவ்வாறு கூறினான். அரோ அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The virtues born in you, that shone with the brilliance
  2. of a great gem set in a jewel, are gone;
  3. you were not born of a line rich in goodness; like a worm without purpose
  4. you have proved that you were born from the earth.

What the poem says

Irāmaṉ continues his cruel speech. The virtues that once shone in Cītai like a gem set in an ornament have vanished; she has not behaved like one born into a noble family, but has proved herself to be like a worm born out of the soil. The taunt plays on her origin: she was found in a furrow when King Caṉakaṉ ploughed the earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kalattiṉiṉ piṟanta mā maṇiyiṉ kāntuṟu
nalattiṉ niṟ piṟantaṉa naṭanta; naṉmai cāl
kulattiṉil piṟantilai; kōḷ il kīṭampōl
nilattiṉil piṟantamai nirappiṉāy arō.