கம்பராமாயணம் 10078 · யுத்த 37.65

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பெண்மையும் - பெண்மைக் குணங்களும்; பெருமையும் - பெருமையாகிய குன்றாச் சிறப்பும்; பிறப்பும் - நற்குடிப் பிறப்பும்; கற்பு எனும் திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும் உண்மையும் - கற்பு என்கின்ற வலிமையும் சீரிய ஒழுக்கமும், அறிவுத்தெளிவும், மேன்மையும், சத்தியமும் ஆகிய எல்லாம்; நீ எனும் ஒருத்தி தோன்றலால் - சீதை என்னும் நீ ஒருத்தி தோன்றியபடியால்; வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்த - கொடைத் தன்மை இல்லாத அரசனது புகழ் கெடுவது போல அடியோடு அழிந்தன.

அநுமன் வார்த்தைகளைக் கொண்டே இராமன் இங்கு இவற்றை அடுக்கிக் கூறினான் என்பதனை முன்வந்த பாடல்களால் (6032, 6035) உணரலாம். "உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈவார் மேல் நிற்கும் புகழ்" (குறள். 232) ஆதலின் கொடைத்திறம் இல்லாதவனுக்குப் புகழ் இல்லை என்பதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Womanhood and greatness, birth, and the firmness
  2. called chastity, conduct, clarity, excellence
  3. and truth, because one woman, you, was born,
  4. have perished like the fame of a king who does not give.

What the poem says

Irāmaṉ claims that because of Cītai, womanhood itself and all its virtues, noble birth, chastity, good conduct, clear mind, dignity and truthfulness, have been destroyed, just as a stingy king's fame dies. The list echoes, and inverts, the very qualities Aṉumaṉ had praised in her earlier. The Kuṟaḷ teaches that fame rests on generosity to those who ask, so a king without generosity has none.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘peṇmaiyum perumaiyum, piṟappum kaṟpu eṉum
tiṇmaiyum, oḻukkamum, teḷivum, cīrmaiyum,
uṇmaiyum, nī eṉum orutti tōṉṟalāl
vaṇmai il maṉṉavaṉ pukaḻiṉ, māyntavāl.