கம்பராமாயணம் 10079 · யுத்த 37.66
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குலத்தின் தோகைமார் - நற்குலத்தில் பிறந்த பெண்கள்; ஐம்புலன்களை அடைப்பர் - (தம் கணவரைப் பிரிந்த காலத்து) ஐம்புலன்களையும் பொறிவழிச் செல்லாது தடுத்து நிறுத்துவர்; ஒழுக்கம் ஆணியா - ஒழுக்கத்தைப் பாதுகாத்தலே உறுதியாகக் கொண்டு; சடைப்பரம் புனைந்து - கூந்தலை அலங்கரியாது சடையாகிய சுமையாகக் கொண்டு; ஒளிர் தகையின் மாதவம் படைப்பர் - விளங்கும் அழகோடு பெருந்தவம் செய்வர்; வந்து இடை ஒரு பழி வந்தால் - எதிர்பாராது இடையில் ஒரு பழி வருமானால்; அது தம் உயிரொடும் துடைப்பர் - அப்பழியைப் போக்கத் தம் உயிரையும் போக்கிக் கொள்வர்.
நற்குலப் பெண்டிர் இயல்பு உனக்கில்லை என்று இகழ்ந்தானாம். இத்தன்மையுடையாள் பிராட்டி என்பதனை "ஆவியம் துகில் புனைவதொன்றன்றி வேறறியாள்” "செல் அரித்திடவும் ஆண்டு எழாதாள்” (கம்ப. 5079, 5078, 5083) என்னும்
ஆங்கிலம் · English translationAI
Translation
- They shut fast the five senses; with conduct as their linchpin
- they wear the burden of matted hair and perform
- great penance of shining worth; and if in between some blame should come,
- they wipe it out together with their lives, the peahens of good family.
What the poem says
Irāmaṉ describes how women of good family behave when separated from their husbands: they restrain their senses, hold to virtue, leave their hair uncombed and matted, live in austerity, and if any slander touches them, they erase it even at the cost of their lives. He implies Cītai has done none of this, though earlier verses showed that she did exactly so in the Aśoka grove.