கம்பராமாயணம் 10080 · யுத்த 37.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
புலவர் புந்தியான் - ஞானியர் மனத்தில் விளங்குபவனாகிய இராமன் (சீதையை நோக்கி); யான் இயம்புவது யாது - நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?; உன் ஒழுக்கச் செய்தி - உனது நடவடிக்கை; உணர்வை ஈடுஅறச் சேதியா நின்றது - என் உணர்வுகளை அடியோடு வெட்டிவிட்டது; சாதியால் - (உன் ஒழுக்கத்தை) உறுதி செய்து சாதிப்பாயாக; அன்று எனின் - அது முடியாது என்றால்; தக்கது ஓர்நெறி போதியால் என்றனன் - உனக்குத் தகுதியான வழியில் போவாயாக என்று கூறினான்.
'சாதி' என்று கூறியதால் பிறர் அறியுமாறு செய்தலே அவன் கருத்து என்பதும் அவனுக்கு அவள் ஒழுக்கத்தின் ஐயமின்று என்பதும் தெள்ளத் தெளிவாக விளங்கும். பலர் முன்னிலையில் சாதிக்கு மாறுரைத்தற்கு அதுவே கருத்து ஆதல் அறிக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- What is there for me to say? The tale of your conduct
- has cut my feelings through and through.
- Prove it, then; and if you cannot, take
- some fitting path and go, said he who dwells in the minds of the wise.
What the poem says
Irāmaṉ ends his speech: her conduct has cut him to the heart; she must prove her purity, or else go wherever is fitting for her. By saying prove it, he shows that his real purpose is to make her innocence evident to everyone present; he himself has no doubt. That is why he speaks against her in front of the whole assembly.