கம்பராமாயணம் 10082 · யுத்த 37.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மண்ணினை நோக்கிய மலரின் வைகுவாள் - பூவுலகத்தில் அவதாரம் எடுத்து வந்த செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமிப் பிராட்டியாகிய சீதை (அவ்வார்த்தை கேட்டு); கண் இணை உதிரமும் புனலும் கான்று உக - கண்கள் இரத்தமும் நீரும் கக்கிச் சிந்த; புண்ணினைக் கோல் உறுத்தனைய பொம்மலால் - புண்ணின்கண் அம்பு செருகியதனால் ஏற்பட்டது போன்ற துன்பம் உடையவளாய்; உள் நினைப்பு ஓவி நின்று - மனத்தின்கண் நினைப்பு ஒழிந்து அடங்கி; உயிர்ப்பு வீங்கினாள் - பெருமூச்சு விட்டாள்.
இராமனைப் பிரிந்து சிறைப்பட்டது புண். இராமன் கடிந்துரை அப்புண்ணில் கோலிட்டாற்போல் ஆயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Her two eyes pouring out blood and tears together,
- she who dwells in the flower and came down to the earth,
- with an anguish like a shaft thrust into a wound,
- stood emptied of all thought and heaved great sighs.
What the poem says
Cītai, Lakṣmī of the lotus come down to earth, weeps tears of blood. Her separation from Irāmaṉ and her captivity were a wound; his harsh words are like an arrow driven into that wound. Her mind goes blank, and she can only sigh.