கம்பராமாயணம் 10083 · யுத்த 37.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பருந்து அடர் சுரத்திடை - பருந்துகள் நெருங்கியுள்ள பாலை நிலத்தில்; பருகு நீர் நசை வருந்து அருந்துயரினால் மாளலுற்ற மான் - உண்ணுதற்குரிய நீர் வேட்கையால் வருந்துகின்ற அரிய துன்பத்தால் இறக்கும் தறுவாயடைந்த மானானது; இருந்தடம் கண்டு - பெரிய நீர் உள்ள தடாகத்தைக் கண்ணாற்கண்டு; அதின் எய்துறா வகை - அந்த தடாகத்தில் இறங்கி நீர் உண்டு தாகம் தணியாதபடி அதிற் செல்லவொண்ணாத வண்ணம்; பெருந்தடை உற்றென - பெரிய தடை நேர்ந்து துயரப்பட்டால் போல; பேதுற்றாள் - மயக்கம் அடைந்தாள்.
இராமனைக் காணும் வேட்கை நீர் நசையாகவும் மான் சீதையாகவும் இராமனைக் கண்டது தடாகத்தைக் காணுதல் எனவும், இராமன் கடுமொழி தடைபட்டதாகவும் கொள்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like a deer in a desert crowded with kites,
- about to die from the bitter pain of thirst for water to drink,
- that sees a broad pool and then meets some great barrier
- so that it cannot reach it, she was stunned and bewildered.
What the poem says
Cītai is like a deer dying of thirst in a kite-haunted desert that finally sees a large pool, only to find its way blocked. Her longing to see Irāmaṉ is the thirst, seeing him is finding the pool, and his harsh words are the barrier that keeps her from it.