கம்பராமாயணம் 10084 · யுத்த 37.71
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(பிராட்டி) உலகினை உற்று நின்று நோக்கி - உலகினை நன்கு கவனித்துப் பார்த்து; ஓடு அரி முற்றுறு நெடுங்கண் நீர் ஆலி மொய்த்து உக - சிவந்த கரிய ரேகைகள் நிறைந்த நீண்ட கண்களிலிருந்து வரும் நீர்த்துளி திரண்டு கீழ்விழ; யான் இருந்து பெற்ற பேறு இற்றது போலும் - யான் உயிர் வாழ்ந்திருந்து பெற்ற பாக்கியம் வீணாயிற்றுப் போலும்; இன்று அவம் உற்ற - (என் பாக்கியம்) இன்று வீண் ஆன தன்மையை அடைந்தது; என்று என்று ஓதுவாள் - என்று திரும்பத் திரும்பக் கூறி வருந்துவாளானாள்.
'யான் இருந்து பெற்ற பேறு' என்பதனை முன்னர் 7653ஆம் பாடலோடு ஒப்பு நோக்கி உணர்க. ஆல் அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She stood and gazed hard at the world, and from her long eyes
- full of running red streaks the hailstones of tears gathered and fell;
- Is the blessing I gained by staying alive broken off, it seems?
- Today it has come to nothing, she said again and again.
What the poem says
Cītai looks around at the assembled world with large tears falling from her red-veined eyes. She laments over and over that the good fortune she had won by enduring and staying alive, the reunion with Irāmaṉ, has today come to nothing.