கம்பராமாயணம் 10091 · யுத்த 37.78

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஏங்கிய பொருமலின் - அழுகின்ற விம்மலால்; இழி கண்ணீரினன் - இறங்குகின்ற கண்ண நீரினை உடையனாய்; வாங்கிய உயிரினன் அனைய மைந்தனும் - போய்விட்ட உயிரை உடையவனை ஒத்த இளைய பெருமாளும்; ஆங்கு - அவ்விடத்தே; எரி - நெருப்பை; விதிமுறை அமைவித்தான் - முறைப்படி உண்டாக்கித் தந்தான்; பதுமப் போதினாள் - தாமரைத் திருமகளாய பிராட்டி; அதன் பாங்குற நடந்தனள் - அந்த நெருப்பின் அருகாமையில் பொருந்த நடந்து சென்று நெருங்கினாள்.

இச்செயலில் இலக்குவனுக்குச் சிறிதும் விருப்பம் இல்லை என்பது அவன் நிலையாலும் செயலாலும் விளங்கும். இவ்வாறாகவும் ஆரண்யத்தில் இலக்குவனை வைது புறம்போக்கிய சீதைக்குப் பாடம் கற்பிக்கவே இந்த நாடகம் நிகழ்ந்தது என்பார் கூற்று கேலிக் கூத்தாகவே முடியும். அன்றியும் மனத்து வைத்து வஞ்சம் தீர்ப்பது என்பது இராமனது பண்பு நலத்துக்குச் சிறிதும் ஒவ்வாது என்பதும் உணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With tears streaming down in sobbing grief,
  2. the young prince, like one whose life had been drawn out of him,
  3. built the fire there by the proper rite; and she
  4. of the lotus flower walked up close beside it.

What the poem says

Weeping and sobbing, as if his life had left him, Ilakkuvaṉ builds the fire according to rule, and Cītai, the lotus goddess, walks up to it. Ilakkuvaṉ's grief shows he has no part in this willingly. The view that the ordeal was staged to punish Cītai for having abused Ilakkuvaṉ in the forest is rejected as absurd, since nursing a grudge is wholly foreign to Irāmaṉ's character.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēṅkiya porumaliṉ iḻi kaṇṇīriṉaṉ
vāṅkiya uyiriṉaṉ aṉaiya maintaṉum
āṅku eri viti muṟai amaivittāṉ; ataṉ
pāṅkuṟa naṭantaṉaḷ patumap pōtiṉāḷ.