கம்பராமாயணம் 10092 · யுத்த 37.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1தீ இடை, அருகுறச் சென்று, தேவர்க்கும்
தாய் தனிக்குறுகலும், தரிக்கிலாமையால்,
வாய்திறந்து அரற்றின மறைகள் நான்கொடும்
ஓய்வு இல் நல் அறமும், மற்று உயிர்கள் யாவையும்.
பொருள் · Meaning in Tamil
தேவர்க்கும் - தேவர்க்கெல்லாம் அன்னையாகிய பிராட்டி; தீயிடை அருகுறச் சென்று தனிக் குறுகலும் - நெருப்பின் இடையே அருகாமையில் சென்று தனியாகச் சேர்ந்த அளவில்; தரிக்கலாமையால் - அக் கொடுமையைப் பார்க்கவே சகியாமையால்; மறைகள் நான்கொடும் ஓய்வு இல் நல் அறமும் உயிர்கள் யாவையும் வாய்திறந்து அரற்றின - நால் வேதமும் ஓய்விலாத தரும தேவதையும் எல்லா உயிர்களும் வாயைத் திறந்து கதறி அழுதன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When she who is mother even to the gods
- went close to the fire and stood alone beside it, unable to bear it,
- the four Vedas cried aloud with open mouths,
- and tireless good dharma, and every other living thing.
What the poem says
As Cītai, mother even of the gods, stands alone at the edge of the fire, the sight is unbearable: the four Vedas, Dharma itself, which never rests, and all living beings cry out in lament.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tīyiṭai, arukuṟac ceṉṟu, tēvarkkum
tāy taṉik kuṟukalum, tarikkalāmaiyāl,
vāy tiṟantu araṟṟiṉa maṟaikaḷ nāṉkoṭum
ōyvu il nal aṟamum, maṟṟu uyirkaḷ yāvaiyum.