கம்பராமாயணம் 10094 · யுத்த 37.81

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இந்திரன் தேவியே முதல ஏழையர்
அந்தர வானின் நின்று அரற்றுகின்றவர்
செந் தளிர்க் கைகளால் சேயரிப் பெருஞ்
சுந்தரக் கண்களை எற்றித் துள்ளினார்.

பொருள் · Meaning in Tamil

இந்திரன் தேவியர் முதல ஏழையர் - இந்திராணி முதலிய பெண்கள்; அந்தர வானின் நின்று அரற்று கின்றவர் - ஆகாய வெளியில் நின்று கூக்குரலிடுபவர்; சேயரிப் பெருஞ் சுந்தரக் கண்களை - சிவந்த கோடுகள் பொருந்திய பெரிய அழகிய தமது கண்களை; செந்தளிர்க் கைகளால் எற்றித் துள்ளினார் - சிவந்த தளிர் போன்ற தம்கரங்களால் அடித்துக் கொண்டு துடித்தார்கள்.

கைகளால் முகத்தில் அறைந்து கொள்ளுதல் அவலத்தில் நிகழும் மெய்ப்பாடு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The women headed by Intiraṉ's queen,
  2. wailing as they stood in the open sky,
  3. beat their large and lovely red-streaked eyes
  4. with hands like red young leaves, and writhed.

What the poem says

Intirāṇi and the other celestial women, watching from the sky, wail and strike their beautiful eyes with their soft red hands, writhing in anguish. Beating one's face is a conventional sign of grief in Tamil poetics.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1intiraṉ tēviyar mutala ēḻaiyar
antara vāṉiṉniṉṟu araṟṟukiṉṟavar
cen taḷirk kaikaḷāl cēyarip peruñ
cuntarak kaṇkaḷai eṟṟit tuḷḷiṉār.