கம்பராமாயணம் 10096 · யுத்த 37.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை - பருத்து அளவின் மிகுந்த ஆபரணங்கள் அணிந்த தனங்களை உடைய வளைக்கையளாகிய பிராட்டி (அக்கினியை நோக்கி); தீச் செல்வா! - அக்கினி தேவனே!; மனத்தினால் வாக்கினால் மறு உற்றேன் எனின் சினத்தினால் சுடுதியால் என்றாள் - நான் மனத்தாலும் சொல்லாலும் களங்கம் உற்றவளானால் கோபத்தால் என்னைச் சுட்டெரிப்பாயாக என்று கூறினாள்; புனத்துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள் - காட்டில் தோன்றும் துளசியை அணிந்த தன் நாயகனாகிய இராமனுக்கும் வணக்கம் செய்தாள்.
மெய் மனம் வாக்கின் வழியதாதலின் மனம் வாக்குக் கூறவே மெய்யால் என்பது கூறாமலே முடிந்தது. இதனை உபலட்சணம் என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- She of the bangled hands, whose jewelled breasts were full beyond measure,
- said, If in mind or in word I have incurred a stain,
- burn me in your anger, O lord of fire!
- and she offered her worship to her husband who wears the wild tulasi.
What the poem says
Cītai calls on Akkiṉi, the fire god: if she has been stained in thought or word, let him burn her in his anger. She does not need to add in body, since the body follows mind and speech; naming those two implies the third. She then bows to her husband, who wears a garland of wild tulasi.