கம்பராமாயணம் 10105 · யுத்த 37.92

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇக்
கை உறு நெல்லி அம் கனியின் காட்டும் என்
மெய் உறு கட்டுரை கேட்டும் மீட்டியோ?
பொய் அறு மாருதி உரையும் போற்றலாய்!

பொருள் · Meaning in Tamil

பொய் உறா மாருதி உரையும் போற்றலாய் - வாய்மையில் சிறிதும் தவறாத அனுமனது வார்த்தையையும் கருதிப் பாதுகாவாதவனே!; ஐயுறு பொருள்களை ஆசு இல் மாசு ஒரீஇ - சந்தேகத்த பொருள்களின் இடமாக குற்றம் நீக்கி அச்சந்தேகத்தைப் போகச் செய்து; கைஉறு நெல்லியம் கனியின் காட்டும் என் மெய் உரை கேட்டும் மீட்டியோ - உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிற என்னுடைய சத்திய வார்த்தையைக் கேட்ட பிறகும் திரும்பச் சேர்த்துக் கொள்ளாயோ.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Things that are doubted, purging their stain so that no fault remains,
  2. I show plain like a gooseberry held in the hand;
  3. even after hearing my true and firm word, will you not take her back,
  4. you who have not heeded even the word of the son of the Wind, who never lies?

What the poem says

Akkiṉi says that he removes every doubt and makes the truth as plain as a gooseberry in the palm. Irāmaṉ has already ignored the testimony of the ever-truthful Aṉumaṉ; now that he has heard the fire god's own true word, will he still not take Cītai back?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘aiyuṟu poruḷkaḷai ācu il mācu orīik
kai uṟu nelli am kaṉiyiṉ kāṭṭum eṉ
mey uṟu kaṭṭurai kēṭṭum mīṭṭiyō?
poy uṟā māruti uraiyum pōṟṟalāy!