கம்பராமாயணம் 10110 · யுத்த 37.97
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இமையவர் - தேவர்கள்; (பிரமனிடம்) புணர்த்தும் மாயையில் பொதுவுற நின்று அவை உணரா இணர்த்துழாய்த் தொங்கல் இராமற்கு - தானே தனது நினைவால் இவர்களிடத்தே கூட்டுகின்ற மாயையில் மற்றவைகளைப் போலவே தானும் ஒன்றித்து நின்று தன் பரம்பொருள் தன்மையை உணரா இருக்கின்ற பூங்கொத்தாகிய துளசி மாலையை அணிந்துள்ள இராமனுக்கு; உண்மை ஒழிவு இன்று உணர்த்துவாய் - இராமனுக்கு அவனது உண்மை நிலையை சிறிதும் விடுபடாமல் உணர்த்துவாயாக; காலம் வந்துளது - அதற்குரிய காலம் வந்திருக்கிறது; என்று இசைப்ப - என்று கூற; தணப்பு இல் தாமரைச் சதுமுகன் உரைசெயச் சமைந்தான் - பிரியாத திருமாலின் உந்தித் தாமரையில் தோன்றிய நான்முகன் சொல்லத் தொடங்கினான்.
திருமாலின் சங்கற்ப கற்பிதம் மாயை. சீவர்களை மயக்குகிறது. தானும் அவதார சீலத்தில் அம்மாயையில் மறைந்து தன்னை உணராதவனாக இருக்கிறான் அம் முதல்வன் என்பது இதனுள் கூறப்பட்டது. நாகபாசப் படலத்துக் கருடன் துதியை இதனுடன் ஒத்துக் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Make the truth known without leaving anything out, for the time has come,
- to Irāmaṉ of the tulasi garland in clusters, who stands like all others
- within the māyā that he himself joins to them and does not know it,
- so the gods said; and the four-faced one of the never-parted lotus made ready to speak.
What the poem says
The gods ask Piramaṉ to reveal to Irāmaṉ his true nature, for the time has come. Māyā, the illusion that binds souls, is Tirumāl's own will; yet in his human incarnation he too stands within it like any other being and does not know himself to be the Supreme. Piramaṉ, born from the lotus that never leaves Tirumāl's navel, begins to speak. The scene echoes Garuḍa's hymn earlier in the war.