கம்பராமாயணம் 10111 · யுத்த 37.98

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1‘மன்னர் தொல்குலத்து அவதரித்தனை; ஒரு மனிதன்
என்ன உன்னலை உன்னை, நீ; இராம! கேள், இதனை;
சொன்ன நான்மறைத் துணிவினில் துணிந்த மெய்த்துணிவு
நின் அலாது இல்லை; நின் இன் இல் வேறு உளது இலை நெடியோய்!

பொருள் · Meaning in Tamil

நெடியோய் - (நிலம் கடந்த) நெடியவனாய திருமாலே!; இராம! - இராமனே!; நீ இதனை கேள் - நீ நான் சொல்கிற இந்த உரையைக் கேட்பாயாக; மன்னர் தொல் குலத்து அவதரித்தனை - அரசர்களது பழமையான சூரிய குலத்தில் தசரத குமாரனாகத் தோன்றினாய்; ஒரு மனிதன் என்ன உன்னை உன்னலை - ஒரு மனிதனாக உன்னை நீ கருதற்க; சொன்ன நான் மறைத் துணிவினில் துணிந்த மெய்த் துணிவு நின் அலாது இல்லை - எல்லாவற்றையும் எடுத்துச் சொன்ன நான்கு வேதங்களின் முடிந்த முடிபாகிய (வேத சிரஸ் எனப்படும்) உபநிடத முடிவில் சொல்லப் படும் முடிபொருள் நின்னை அல்லாமல் வேறு இல்லை; நின்னின் வேறு உளது இலை - நின்னை அல்லாமல் நின்னிடத்திருந்து நீங்கி வேறு பொருள்கள் உளது என்னும் இருப்பினைப் பெறுவதும் இல்லை.

நீயே பரம்பொருள்; நீயே எல்லாப் பொருளும்; உன்னையல்லாது வேறு பொருள் எதுவும் இல்லை எனவும் கூறலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. You have taken birth in the ancient line of kings; do not think
  2. of yourself as a mere man; Irāmā, hear this:
  3. the true certainty that the four Vedas settle in their final certainty
  4. is none but you; there is nothing apart from you, O tall one!

What the poem says

Piramaṉ tells Irāmaṉ that although he was born into the ancient solar line of kings as Tacarataṉ's son, he must not think of himself as merely human. The ultimate truth that the Upaniṣads, the culmination of the Vedas, proclaim is he alone; nothing exists apart from him. He addresses Irāmaṉ as the tall one, Tirumāl, who once measured the worlds in a stride.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘maṉṉar tol kulattu avatarittaṉai; oru maṉitaṉ
eṉṉa uṉṉalai uṉṉai, nī; irāma! kēḷ, itaṉai;
coṉṉa nāṉmaṟait tuṇiviṉil tuṇinta meyt tuṇivu
niṉ alātu illai; niṉṉiṉ vēṟu uḷatu ilai neṭiyōy!