கம்பராமாயணம் 10112 · யுத்த 37.99
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
யாதினும் பழையது பகுதி என்று உளது - எல்லாவற்றினும் பழைமை யானதாகிய மூலப்பிருகிருதி என்று உள்ள தத்துவமும்; பயந்த - அம் மூலப் பிருகிருதியால் தரப்பட்ட; விகுதியால் வந்த விளைவு - விகாரத்தால் உண்டான காரியங்களாகிய தத்துவங்களும்; மற்று அதற்குமேல் நின்ற புகுதி யாவர்க்கும் அரிய அப்புருடனும் - அந்தத் தத்துவங்களின் வேறாகக் கண்டுணர்தற்கரியதாய் மேற்பட்டு நின்ற ஜீவாத்மாவும்; நீ - நீயேயாவாய்; இம்மிகுதி - இந்த உலகத் தோற்றம் எல்லாம்; உன் பெரு மாயையினால் வந்த வீக்கம் - உனது பெரிய சங்கற்பம் (நினைவு) என்று சொல்லப்படுகிற மாயையால் உண்டான பரப்பாகும்.
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற தன் மாத்திரைகள் ஐந்து, மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஞானேந்திரியங்கள் ஐந்து, வாக்கு பாதம் பாணி பாயுரு உபத்தம் என்ற கன்ம இந்திரியங்கள் ஐந்து, நிலம் நீர் தீ காற்று ஆகாயம் என்ற பூதங்கள் ஐந்து, மகத் அகங்காரம் மனம், பிருகிருதி என்ற நான்கும் கூடி தத்துவங்கள் 24. புருடன் என்கிற சீவாத்மா 25. பரம்பொருள் 26. இருபத்தாறாவது தத்துவமாய பரம்பொருளாகிய பிரம்மத்தின் சங்கற்பமே தத்துவங்கள் அனைத்தும் என்றவாறாகும். ஆகவே நீ இலாது வேறு இலை; நின்னின் வேறு இலை என்பதையே மீண்டும் உணர்த்தியவாறாகும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- What is called Prakṛti, older than everything, the products
- that came from the changes it brought forth, and that which entered and stands above them,
- that Puruṣa so hard for anyone to know, all are you;
- this abundance is the swelling that came from your great māyā.
What the poem says
Piramaṉ uses the categories of Sāṅkhya philosophy: primal matter, Prakṛti, the oldest of all; the evolutes that arise from it; and the soul, Puruṣa, that stands above them, hard for anyone to grasp, are all Irāmaṉ himself. The whole expanse of the world is a swelling produced by his great māyā, his creative will. The commentary counts the twenty-four principles, the soul as the twenty-fifth and the Supreme as the twenty-sixth, whose will is the source of all.