கம்பராமாயணம் 10113 · யுத்த 37.100

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
“

பொருள் · Meaning in Tamil

அன்ப! - எவ்வுயிர்களிடத்தும் அன்புள்ளவனே!; முன்பு பின்பு இருபுடை எனும் குணிப்பு அரு முறைமைத் தன் பெருந்தன்மை தான் தெரி மறைகளின் தலைகள் - தோற்றம், இறுதி என்கின்ற இருபக்கத்தையும் இன்னது என்று அளவிட்டறிதற்கரிய முறைமை யுடையதும் தன் அளப்பரும் தன்மையைத் தானே அறிய வல்லதும் ஆகிய வேதங்களின் முடிபொருள் காட்டும் வேத சிரஸ் எனப்படும் உபநிடதங்கள்; "மன் பெரும் பரமார்த்தம்" என்று உரைக்கின்ற மாற்றம் - நிலை பெற்ற மிக மேலான பரம்பொருள் என்று குறிப்பிடுகின்ற சொல்; நின்னை யல்லால் மற்று இங்கு யாரையும் அறையா - (இராமனாக அவதரித்துள்ள) திருமாலாகிய நின்னை அல்லாமல் வேறாக இங்குள்ள பிரமருத்திர இந்திராதி தேவர்களுள் யாரையும் குறிப்பிடாது.

மற்ற எல்லோரும் சீவாத்மாக்களே அன்றி பரப்பிரம்மம் ஆகா என்றதாம். "முன்பு பின்பு... தலைகள்” என்பதற்கு, தோற்றமும், இறுதியும் ஆக இருபக்கத்தையும் அறிய வாராத தன்மையை உடைய பரம்பொருளாகிய தன் பெருந்தன்மையைத் தன் ஞானத்தால் தானறிந்துரைக்கின்ற வேத சிரஸ் எனப்படும் உபநிடதம் எனப் பொருள் கூறலும் ஒன்று. இவ்வுரையில் வேத உபநிடதங்களே பரம்பொருளின் தோற்ற இறுதிகளை அறியவல்லன என்ற பொருள் உண்டாகும். பரமார்த்தம் - பரம் பொருள் - மேலான பொருள் - பரப் பிரம்மம் எனப்பெறும். வேதத்தின் வேர் பிரணவம். வேதத்தின் தலை - உபநிடதம் ஆகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The heads of the Vedas, which know their own great nature
  2. in an order whose before and after, its two ends, cannot be measured,
  3. when they speak the word, the abiding great supreme truth,
  4. name no one here but you, O loving one.

What the poem says

Piramaṉ says the Upaniṣads, the heads of the Vedas, which alone can sense the vastness of a reality whose beginning and end cannot be measured, use the term supreme truth for Irāmaṉ, Tirumāl incarnate, and for no one else, not Piramaṉ, Rudra or Intiraṉ, who are only individual souls. The Upaniṣads are called the head of the Veda, as the sacred syllable Om is called its root.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘muṉpu piṉpu iru puṭai eṉum kuṇippu aru muṟaimait
taṉ perun taṉmai tāṉ teri maṟaikaḷiṉ talaikaḷ,
“maṉ perum paramārttam “ eṉṟu uraikkiṉṟa māṟṟam,
aṉpa! niṉṉai allāl maṟṟu iṅku yāraiyum aṟaiyā.