கம்பராமாயணம் 10114 · யுத்த 37.101
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எனக்கும் - பிரமனாகிய எனக்கும்; எண்வகை ஒருவற்கும் - அட்ட மூர்த்தியாக உள்ள உருத்திரனுக்கும்; இமையவர்க்கு இறைவன் தனக்கும் - இந்திரனுக்கும்; பல்பெரு முனிவர்க்கும் - பல பெரிய முனிவர்களுக்கும்; உயிருடன் தழீஇய அனைத்தினுக்கும் - உயிருடைய பொருள்களாய எல்லாவற்றுக்கும்; நீயே பரம் என்பதை அறிந்தார் - நீயே மேலானவன் (இறைவன்) என்கின்ற உண்மையை அறிந்த ஞானிகள்; வினைத் துவக்கு உடை வீட்ட அரும் தளைநின்று மீள்வார் - இருவினைகளாகிய வலைக்குள் அகப்பட்டு மீள முடியாத அரிய பிறவி என்னும் பெருந் தளையிலிருந்து மீண்டு வீடுபேறு அடைவார்.
அட்டமூர்த்தி சிவபெருமான். "நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், யஜமானன் என்ற ஆன்மா” ஆக எட்டு வடிவங்களை உடையவன். "இருநிலனாய்த் தீயாகி நீரும் ஆகி, இயமானனாய், எறியும் காற்றும் ஆகி, அருநிலைய திங்களாய், ஞாயிறாகி, ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி” என்ற திருநாவுக்கரசர் அருளிய நின்ற திருத்தாண்டகம் கூறுமாறு அறிக. இருவினைகளாற் பிறவியும் பிறவியால் இருவினைகளும் என இவை காரண காரியத் தொடர்ச்சியாய் முடிவின்றித் தொடர்தலின் 'வீட்ட அருந்தளை' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- That for me, for the one of eight forms, and for the lord
- of the unblinking gods, for the many great sages, and for all
- that is joined with life, you alone are the Supreme: those who know this
- are freed from the bond of karma's fetters, so hard to break.
What the poem says
Those who know that Irāmaṉ is supreme over Piramaṉ, over Civaṉ of the eight forms, over Intiraṉ, over the great sages and over every living being are freed from the endless chain of birth and karma. Civaṉ's eight forms are the five elements, sun, moon and the sacrificer, as a hymn of Tirunāvukkaracar describes. Karma causes birth and birth produces karma, so the bond is said to be hard to break.