கம்பராமாயணம் 10128 · யுத்த 37.115

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன்
காதல் மைந்தனைக் காணிய உவந்தது ஓர் கருத்தால்,
பூதலத்திடைப் புக்கனன்; புகுதலும், பொரு இல்
வேதவேத்தனும் அவன் மலர்த் தாள்மிசை வீழ்ந்தான்.

பொருள் · Meaning in Tamil

ஆதியான் பணி அருள் பெற்ற அரசருக்கு அரசன் - சிவபெருமான் கட்டளையாகிய அருளைப் பெற்ற சக்கரவர்த்தியாகிய தயரதன்; காதல் மைந்தனைக் காணிய உவந்தது ஓர் கருத்தால் - தன் அன்பு மகனைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்ட ஓர் எண்ணத்தால்; பூதலத்திடைப் புக்கனன் - மண்ணுலகத்தில் நுழைந்தான்; புகுதலும் - (அவ்வாறு) பூமிக்கு வருதலும்; பொருஇல் வேத வேந்தனும் அவன் மலர்த் தாள்மிசை விழுந்தான் - ஒப்பற்ற வேதத் தலைவனான இராமனும் அத்தயரதனது மலர்போலும் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The king of kings, having received the gracious command of the First One,
  2. with a joyful longing to see his beloved son
  3. came down to the earth; and as he came, the peerless
  4. king of the Vedas fell at his flower-like feet.

What the poem says

Tacarataṉ, king of kings, receives Civaṉ's gracious command and, longing to see his beloved son, descends to earth. As soon as he arrives, Irāmaṉ, the incomparable lord of the Vedas, falls at his father's feet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ātiyāṉ paṇi aruḷ peṟṟa aracarukku aracaṉ
kātal maintaṉaik kāṇiya uvantatu ōr karuttāl,
pūtalattiṭaip pukkaṉaṉ; pukutalum, poru il
vēta vēntaṉum avaṉ malart tāḷmicai viḻuntāṉ.