கம்பராமாயணம் 10130 · யுத்த 37.117
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கேகயன் மகள் அன்று கொண்ட வரம் எனும் அயில்வேல் என் இதயத்தினிடை இன்றுகாறும் நின்றது - கேகயத்தரசன் மகளாகிய கைகேயி (அயோத்தியில் உனது பட்டாபிஷேகத்துக்கு நாள் குறித்த) அன்று என்னிடம் பெற்றுக் கொண்ட வரம் என்ற கூரிய வேல் என் நெஞ்சகத்து இன்று வரை தங்கியிருந்தது; என்னைக் கொன்று நீங்கலது - என்னைக் கொலை செய்து இறக்கடித்த பிறகும் நீங்கவில்லை; இன்று உன் குலப்பூண் மன்றல் ஆகம் ஆம் காந்த மாமணி வாங்க இப்பொழுது அகன்றது - இன்றைக்கு (உன்னை இறுகத் தழுவிய போது) உன் சிறந்த ஆபரணங்களை அணிந்த மணம் பொருந்திய மார்பு ஆகிய காந்தமாமணி இழுத்த படியால் இப்பொழுது (அவ்வேல்) அகன்று போயிற்று.
வரம்; 'இராமன் வனம் போக வேண்டும்' என்று கேட்ட வரத்தைக் குறித்தது. பரதன் நாடாள்வதில் தயரதனுக்கு வெறுப்பின்மை. "மண்ணே கொள் நீ மற்றையதொன்றும் மற (கம்ப. /522) என்பதாலும் உணரலாகும். போரிடைப் புண்ணில் படைக்கலத் துகள்கள் சிக்கியிருக்குமானால் காந்த மணியைப் புண்ணின் மேல் காட்டின் இரும்புத் துண்டுகள் காந்தத்தால் ஈர்க்கப்பட்டு வெளியேறும் சிகிச்சைமுறை பற்றி வரத்தை வேல் ஆகவும் அது தைத்த தயரதன் இதயத்திலிருந்து அதனை வெளியேற்ற இராமனது தழுவிய மார்பு காந்த மணியாகவும் இங்கு கொள்ளப் பெற்றதைக் காட்சிப் படலத்து 63 ஆம் பாடலோடு (கம்ப. 5131) பொருத்திப் பார்த்து அறிக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sharp spear that was the boon the Kēkaya king's daughter took that day
- has stayed lodged in my heart until today;
- it killed me and still did not leave; now it has come out,
- drawn today by the great lodestone that is your fragrant chest adorned with your line's jewels.
What the poem says
Tacarataṉ says the boon Kaikēyi extracted from him, that Irāmaṉ be sent to the forest, pierced his heart like a sharp spear and stayed there even after it killed him. Now, as he embraces his son, Irāmaṉ's chest acts like a lodestone and draws it out. The image comes from an old medical practice of using a magnet to pull iron fragments from a wound. Tacarataṉ had no objection to Paratan ruling; it was the exile of Irāmaṉ that wounded him.