கம்பராமாயணம் 10131 · யுத்த 37.118
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சுந்தரப் பெருந்தோளினாய் - அழகிய பெரிய தோள்களை உடைய இராமனே; மைந்தரைப் பெற்று வானுயர் தோற்றத்து மலர்ந்தார் என் துணைத்தாளின் பைந் துகள்களும் ஒக்கிலர் ஆம் எனப் படைத்தாய் - நல்ல மக்களைப் பெற்று மிக உயர்ந்த பெருமையுடன் விளங்கியவர்கள் கூட எனது இரண்டுகால்களில் உள்ள சிறு தூசுக்கும் ஒப்பாகார் என்னும்படி நீ எனக்குச் சிறந்த பெருமையை உண்டாக்கித் தந்தாய்; உய்ந்தவர்க்கு அருந் துறக்கமும் புகழும் பெற்று உயர்ந்தேன் - (தீவினையிலிருந்து) பிழைத்தவர்களுக்குப் பெறுதற்கரிய மேல் உலகமும், புகழும் (மறுமைக்கும் இம்மைக்குமாகப்) பெற்று (உன்னால் இருமையிலும்) உயர்ந்தேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those who had sons and flowered into sky-high glory,
- O you of beautiful great shoulders, you have made them
- not equal even to the fine dust of my two feet;
- I have risen, winning heaven, rare even for the saved, and fame.
What the poem says
Tacarataṉ tells Irāmaṉ that through him he has been raised so high that all other fathers who won glory through their sons are not worth the dust on his feet. Through Irāmaṉ he has gained both fame in this world and heaven in the next, a heaven hard to win even for those who escape evil.