கம்பராமாயணம் 10135 · யுத்த 37.122

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘‘
‘
‘‘

பொருள் · Meaning in Tamil

பொன்னைத் தீயிடைப் பெய்தல் அப்பொன்னுடைத் தூய்மை தன்னைக் காட்டுதற்கு என்பது மனக்கொளல் தகுதி - பொன்னை நெருப்பில் போடுவது பொன்னைச் சொக்கத் தங்கம் என உலகிற்குக் காண்பிப்பதற்காகத்தான் என்று மனத்தின்கண் நினைத்தலே தகுதி (அதுபோல); இப்பெரியோன் - குணங்களால் உயர்ந்த இவன்; உலகில் பின்னைக் காட்டுதற்கு அரியது என்று எண்ணி உன்னை 'கற்பினுக்கு அரசி' என்று காட்டினன் - உலகத்தில் (இச்சமயம் தவறினால்) பிறகு தெளிவித்தல் இயலாது என்று கருதி உன்னை 'கற்பிற் சிறந்தவள்' என்று (இந்நிகழ்ச்சியால்) தெளிவித்தான்.

சுத்தத் தங்கம் தீயில் இட்டால் குறையாது மாற்றும் எடையும், அதனைத் தீயில் இட்டே அறிவர். ஆகவே உலகிற்காகச் சான்று வேண்டல் தவறன்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Putting gold into the fire is to show
  2. the purity of that gold: this is fit to keep in mind;
  3. he has shown you to be the queen of chastity, thinking,
  4. Later it would be hard to show it to the world, this great one.

What the poem says

Tacarataṉ compares the ordeal to testing gold in fire: gold is put in the flames to prove its purity, since pure gold loses neither its fineness nor its weight there. Irāmaṉ realised that if the moment passed, Cītai's purity could never be demonstrated afterward, so he showed the world now that she is the queen of chastity.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1“‘poṉṉait tīyiṭaip peytal ap poṉṉuṭait tūymai
taṉṉaik kāṭṭutaṟku ‘‘ eṉpatu maṉak koḷal takuti;
uṉṉaik kāṭṭiṉaṉ, ‘kaṟpiṉukku araci ‘ eṉṟu, “ulakil
piṉṉaik kāṭṭuvatu ariyatu ‘‘ eṉṟu eṇṇi ip periyōṉ.