கம்பராமாயணம் 10136 · யுத்த 37.123

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பெண் பிறந்தவர் அருந்ததியே முதல் பெருமைப் பண்பு இறந்தவர்க்கு அருங்கலம் ஆகிய பாவாய்! - பெண்ணாய்ப் பிறந்தவர்களாகிய அருந்ததி முதலாகிய பெருமையின் எல்லை கடந்தவர்களுக்கும் அணிகலம் போல உள்ள பெண்ணே!; உனக்கு பிறந்தகம் மண் - உனக்குப் பிறப்பிடம் இம் மண்ணாகும்; (ஆனால்) நீ வான் நின்றும் வந்தாய் - நீ வீட்டுலகத்தின் நின்றும் இங்கு வந்து அவதரித்தாய்; எண் பிறந்த நின் குணங்களுக்கு இழுக்கு இனி இலையால் - உலகால் நன்கு மதிக்கற்பாடு உடைய நின் சிறந்த குணங்களுக்கு யாதொரு குறையும் இனி வராது.

'எண் பிறந்த' என்பது நன்கு மதிக்கற் பாடு உடைய. "சான்றோரால் எண்ணப்பட” என்ற (குறள் 922) குறளில் எண்ணுதல் நன்கு மதித்தலாமாறு அறிக. 'எண்பு இறந்த' எனப் பிரித்து 'கணக்கற்ற' எனப்பொருள் உரைத்தலும் ஒன்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O lovely one, rare jewel even to those born women
  2. who have passed beyond the bounds of greatness, Aruntati first among them!
  3. The earth is your birthplace, yet you came down from heaven;
  4. to your qualities, held in high esteem, there is no blemish any more.

What the poem says

Tacarataṉ praises Cītai as the crowning jewel even of women like Aruntati who exceeded all bounds of virtue. She was born from the earth, yet in truth she came down from heaven, and her esteemed qualities can never again be stained. The phrase translated held in high esteem can also be read as beyond counting.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘peṇ piṟantavar, aruntatiyē mutal perumaip
paṇpu iṟantavarkku aruṅ kalam ākiya pāvāy!
maṇ piṟantakam uṉakku; nī vāṉniṉṟum vantāy;
eṇ piṟanta niṉ kuṇaṅkaḷukku iṉi iḻukku ilaiyāl.