கம்பராமாயணம் 10137 · யுத்த 37.124
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செம்மல் - தயரதன்; என்னச்சொல்லி - என்று இவ்வாறு உரைத்து; அவ் ஏந்திழை திருமனத்து யாதும் உன்னச் செய்வது ஓர் முனிவு இன்மை மனம் கொளா உவந்தான் - அந்தச் சீதை தன் நல்ல மனத்தில் சிறிதும் கருதுகின்ற வெறுப்பு இன்மை நிகழ்ந்தபடியைத் தன் மனத்தில் அறிந்து மகிழ்ச்சி அடைந்தான்; பின்னை - பிறகு; அவ் இளவலை - அந்த இளைய பெருமாளாகிய இலக்குவனை; உள்அன்பு பிணிப்ப - மனத்தகத்துச் சிறந்த அன்பு கட்டி இழுக்க; தன்னைத்தான் என கண்கள் நீர் ததும்ப தழுவினன் - தானே தன்னைத் தழுவிக்கொள்வது போல கண்களில் நீர் பெருகத் தழுவிக்கொண்டான்.
தான் அவன் என்னும் வேறின்மையைத் தயரதன் இலக்குவன்பால் கண்டான். தனக்குக் கண்ணும் உயிருமாம் இராமனைத்தான் இருந்து காத்தாற் போல அவன் பதினான்கு ஆண்டுகள் உடனிருந்து காத்தவன். எனவேதான் அவன் என வேறின்மை கண்டான் ஆயிற்று; அகத்தே அன்பு தழுவ புறத்தே மேனிதழுவியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having spoken so, he rejoiced, taking to heart that in the noble mind
- of that jewelled lady there was no resentment at all to make her brood;
- and then the noble king, bound by the love within him,
- embraced that younger son as if embracing himself, his eyes brimming with tears.
What the poem says
Tacarataṉ is glad to see that Cītai holds no resentment at all. Then, moved by deep love, he embraces Ilakkuvaṉ with tears in his eyes, as though embracing himself: Ilakkuvaṉ guarded Irāmaṉ, his father's eye and life, for fourteen years just as Tacarataṉ himself would have, so father and son feel no difference between them.