கம்பராமாயணம் 10140 · யுத்த 37.127
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று - இலக்குவனை இவ்வாறு பாராட்டிவிட்டு; பின்னரும் - பிறகும்; இராமனை - இராமனைப் பார்த்து; உயர்குணத்தோய் - உத்தம குணங்களை உடையவனே!; 'யான் உனக்கு ஈவது ஒன்று கூறுதி' என - நான் உனக்குக் கொடுக்க வேண்டுவது ஒன்றைக் கூறுக என்று கேட்ப (அதற்கு இராமன்); யான் உனை வானிடைச் சென்று கண்டு இடர் தீர்வென் என்று இருந்தேன் இன்று காணப் பெற்றேன் இனிப் பெறுவது என்? என்றான் - நான் உன்னை விண்ணுலகத்திடத்தில் சென்று கண்டு துன்பம் நீங்குவேன் என்று நினைத்திருந்தேன்; (ஆனால்) இன்று இங்கேயே காணும் பேறு அடைந்தேன்; புதிதாக இனிப் பெறுவதற்கு என்ன இருக்கிறது, என்று கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Having said this, he then said to Irāmaṉ, Tell me one thing
- that I may give you, O you of lofty virtue! And he said, I had thought
- to end my sorrow by going to heaven and seeing you there;
- today I have been granted to see you; what more is there to gain?
What the poem says
Tacarataṉ offers Irāmaṉ any gift he might ask. Irāmaṉ replies that he had expected to see his father again only in heaven, ending his grief there; having seen him here today, he has nothing more to ask for.