கம்பராமாயணம் 10141 · யுத்த 37.128

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(தயரதன்) ஆயினும் - ஆனாலும்; உனக்கு அமைந்தது ஒன்று உரை என - உனக்குப் பொருந்தியதொன்றினைக் கேட்க என்று சொல்ல; அழகன் - இராமன்; நீ தீயள் என்று துறந்த என் தெய்வமும் மகனும் - உன்னால் தீயவள் என்று துறக்கப் பட்ட என் தெய்வமாகிய கைகேயியும், பரதனும்; 'தாயும் தம்பியும் ஆம் வரம் தருக' என தாழ்ந்தான் - எனக்குத் தாயும் தம்பியும் ஆகும்படியான வரத்தைத் தருக எனக் கேட்டு வணங்கினான்; (அது கேட்டு அவன் அருள் திறம் நினைந்து) உயிர் எலாம் வழுத்தி - உயிர்கள் எல்லாம் அவனை வணங்கி; வாய்திறந்து எழுந்து ஆர்த்தன - எழுந்து வாய்திறந்து மகிழ்ச்சிப் பேரொலி செய்தன.

துறந்த படியை, நகர் நீங்குபடலம் 49 ஆம் பாடல் (கம்ப. 1654) எடுத்துக்காட்டும். கைகேயியைத் தாரம் அல்லள் எனவும், பரதனை மகன் என்றுன்னேன்; உரிமைக்கு ஆகான் எனவும் துறந்தான் தயரதன். வரம் வேண்டும் போது கைகேயியையும், பரதனையும் எப்படிக் குறிப்பிடுவது என்னும்போது 'தெய்வமும், மகனும்' என்று இராமன் அழைத்தது கம்பரின் கவிசாதுர்யமாகும். என் தாயும் என்று குறிப்பிட்டால் தயரதன் மனைவியல்லள் என்று சொல்லிய பிறகு தாய், தம்பி, என்று குறிப்பிட முடியாது. எனவே தெய்வம் என்றான் இராமன். மகன் என்பது உறவுப் பொருளில் வாராது 'சிறுவன்' என்பது போலப் பொதுப் பொருளில் வந்தது என்று கொள்ளலாம். தயரதன் கைகேயியை மனைவி என்று ஏற்றுக் கொண்டாலே இராமன் தாய் என்று அழைக்க முடியும், தயரதன் பரதனை மகன் என்றாலே இராமன் அவனைத் தம்பி என்று அழைக்க முடியும் என்பதை உன்னி 'தெய்வமும் மகனும்' 'தாயும் தம்பியும்' ஆம்வரம் தருக என்று கேட்டான் இராமன் என்பது கம்பர் கவிநயத்துக்கு எடுத்துக்காட்டு. உரையாடல்களை அமைக்கும் திறனில் கம்பரின் உயர்ந்த கவித்துவத்துக்கு எடுத்துக்காட்டாகும் என்பர் என் குருநாதர் மகா வித்துவான் மயிலம் வே. சிவசுப்பிரமணியன் அவர்கள். இராமனது பண்பு நலங்கள் சிறந்து வெளிப்படுவதற்கும், அவனது விரிந்த சகோதரத்துவத்துக்கு எல்லை கண்டதும் 14 ஆண்டு வனவாசமே ஆதலின் அதனைத் தந்த கைகேயியே இராமனைத் தெய்வமாக்கியவள் ஆதலின் இராமன் அச்சிற்றன்னையைத் 'தெய்வம்' என்றது மிகவும் பொருத்தமானதே என்பது அவர்கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Even so, name one thing that is fitting for you, he said; and the beautiful one said,
  2. My goddess and the son whom you renounced, calling her wicked,
  3. grant the boon that they become my mother and my brother, and bowed low;
  4. and every living thing rose up, praising him, and cheered aloud.

What the poem says

Pressed to name a boon, Irāmaṉ asks that Kaikēyi and Paratan, whom Tacarataṉ had disowned, she as no longer his wife and he as no longer his son, be restored as Irāmaṉ's mother and brother. All creatures cheer at his generosity. The commentary admires Kampaṉ's phrasing: since Tacarataṉ had renounced them, Irāmaṉ cannot yet call them mother and brother, so he calls Kaikēyi my goddess and Paratan the son, asking that the boon make them his mother and brother again. Kaikēyi, by causing the exile that revealed Irāmaṉ's greatness, could indeed be called the one who made him divine.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘āyiṉum, uṉakku amaintatu oṉṟu urai ‘eṉa, aḻakaṉ,
‘tīyaḷ eṉṟu nī tuṟanta eṉ teyvamum makaṉum,
tāyum tampiyum ām varam taruka ‘eṉat tāḻntāṉ;
vāy tiṟantu eḻuntu ārttaṉa uyir elām vaḻutti.